ஐய்யப்பனின் 18 படிகளும் எதைக் குறிக்கிறது?
1) ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது அந்த 18 கருவிகள்
- வில்
- வாள்
- வேல்
- கதை
- அங்குசம்
- பரசு
- பிந்திபாவம்
- பரிசை
- குந்தம்
- ஈட்டி
- கை வாள்
- முன்தடி
- கடுத்தி வை
- பாசம்
- சக்கரம்
- ஹலம்
- மழு
- முஸலம் - ஆகிய 18 போர்க் கருவிகள் ஆகும்.
2) பதினெட்டுப் படிகளை
இந்திரியங்கள் ஐந்து ( 5 )
புலன்கள் ஐந்து ( 5 )
கோசங்கள் ஐந்து ( 5 )
குணங்கள் மூன்று ( 3 )
என்று கூறுகிறார்கள் அவை முறையே
இந்திரியங்கள் ஐந்து ( பஞ்சேந்திரியம் ) :
- கண்
- காது
- மூக்கு
- நாக்கு
- கை கால்கள்
புலன்கள் ஐந்து ( ஐம்புலன்கள் ) :
- பார்த்தல்
- கேட்டல்
- சுவாசித்தல்
- ருசித்தல்
- ஸ்பரிசித்தல்
கோசங்கள் ஐந்து ( பஞ்ச கோசங்கள் ) :
- அன்னமய கோசம்
- ஆனந்தமய கோசம்
- பிராணமய கோசம்
- மனோமய கோசம்
- ஞானமய கோசம்
குணங்கள் மூன்று ( த்ரி குணங்கள் ) :
- ஸத்வ குணம்
- ரஜோ குணம்
- தமோ குணம்
இந்த பதினெட்டையும் கட்டுப் படுத்தியோ ஜெயித்தோ வாழ பதினெட்டுப் படிகளை ஏற வேண்டும்
3) 18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்
- மெய்
- வாய்
- கண்
- காது
- மூக்கு
- சினம்
- காமம்
- பொய்
- களவு
- சூது
- சுயநலம்
- பிராமண
- க்ஷத்திரிய
- வைசிய
- சூத்திர
- ஸத்ய
- தாமஸ
- ராஜஸ
என்ற 18 வகை குணங்களை தாண்டினால் பகவான் ஐயப்பனைக் காணலாம்
4) கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்களை குறிப்பதுதான் 18 படிகளாகும்
18 படிகளில் வாஸம் செய்யும் தேவதாக்கள்
- ஒன்றாம் திருப்படி : சூரிய பகவான்
- இரண்டாம் திருப்படி : சிவன்
- மூன்றாம் திருப்படி : சந்திர பகவான்
- நான்காம் திருப்படி : பராசக்தி
- ஐந்தாம் திருப்படி : அங்காரக பகவான்
- ஆறாம் திருப்படி : முருகன்
- ஏழாம் திருப்படி : புத பகவான்
- எட்டாம் திருப்படி : விஷ்ணு
- ஒன்பதாம் திருப்படி : வியாழ ( குரு ) பகவான்
- பத்தாம் திருப்படி : பிரம்மா
- பதினொராம் திருப்படி : சுக்கிர பகவான்
- பனிரெண்டாம் திருப்படி : இலட்சுமி
- பதிமூன்றாம் திருப்படி : சனி பகவான்
- பதிநான்காம் திருப்படி : எம தர்ம ராஜன்
- பதினைந்தாம் திருப்படி : இராகு பகவான்
- பதினாறாம் திருப்படி : சரஸ்வதி
- பதினேழாம் திருப்படி : கேது பகவான்
- பதினெட்டாம் திருப்படி : விநாயகப் பெருமான்
( இதில் கவனிக்கப்பட வேண்டியவை ஒற்றைப்படை வரிசையில் நவக்ரஹ தேவதாக்களும் இரட்டைப்படை வரிசையில் தெய்வக் குடும்பமும் வாஸம் செய்வதாக ஐதீகம் )
எனவேதான் படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது படிபூஜை நடைபெறும் தினத்தன்று 18 படிகளை பூக்களாலும் ; விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றிற்கு கீழே 18 படி ஏறுமிடத்தில் பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்களை வைத்து படிபூஜை செய்வார்
ஒவ்வொரு படியிலும் பீடபூஜையும் ; மூர்த்தி பூஜையும் நடத்துவார் பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெறும் நீராஞ்சன தீபம்
( தேங்காயை இரண்டாக உடைத்து அதன் மூடியில் நெய் ஊற்றி ஏற்றப்படுவது ) காண்பிப்பார் படிபூஜைக்கு உபயோகப்படுத்தும் பொருட்கள் அனைத்தும் வெள்ளியால் செய்யப்பட்டவையாகும்
18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். நைவேத்யம் காட்டிய பின் பிரசன்ன பூஜை செய்வார் பிறகு கற்பூர ஜோதி ஏற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு சபரிமலை பிரதான தந்திரியும் மேல்சாந்தியும் மற்றும் சில பக்தர்களும் படியேறிச் செல்வார்கள் பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப் பாயசம் நைவேத்யம் செய்து தீபாராதனை காண்பிப்பார்கள்.
5) 18 படிகளிலும் ஐயப்பன் 18 வகையான திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது அவை என்னவென்றால்
- ஒன்றாம் திருப்படி : குளத்துப்புழை பாலகன்
- இரண்டாம் திருப்படி : ஆரியங்காவு ஐயன்
- மூன்றாம் திருப்படி : எரிமேலி சாஸ்தா
- நான்காம் திருப்படி : அச்சன்கோயில் அரசன்
- ஐந்தாம் திருப்படி : புவனேஸ்வரன்
- ஆறாம் திருப்படி : வீரமணி கண்டன்
- ஏழாம் திருப்படி : பொன்னம்பல வாஸன்
- எட்டாம் திருப்படி : மோஹினி பாலன்
- ஒன்பதாம் திருப்படி : சிவ புத்ரன்
- பத்தாம் திருப்படி : ஆனந்த சித்தன்
- பதினொன்றாம் திருப்படி : இருமுடிப் பிரியன்
- பனிரெண்டாம் திருப்படி : பந்தள ராஜகுமாரன்
- பதிமூன்றாம் திருப்படி : பம்பா வாஸன்
- பதினான்காம் திருப்படி : வன்புலி வாஹனன்
- பதினைந்தாம் திருப்படி : ஹரிஹர சுதன்
- பதினாறாம் திருப்படி : ஸத்குரு நாதன்
- பதினேழாம் திருப்படி : பிரம்மாண்ட நாயகன்
- பதினெட்டாம் திருப்படி : ஸத்ய ஸ்வரூபன்