அனுமன் இலங்கையை தீயிட்ட சம்பவம்....

#spiritual #God #SriLanka
அனுமன் இலங்கையை தீயிட்ட சம்பவம்....

'சீதா தேவியை அனுப்ப முடியாது' என்று தீர்மானித்து,  ஹனுமானின் வாலில் தீ வைக்க சொல்லி ராக்ஷஸர்களுக்கு ஆணையிட்டான் ராவணன். 

ஊர் முழுக்க ஹனுமானை கட்டி இழுத்து சென்று, ஊரில் இருந்த அனைத்து ராக்ஷஸ குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் உட்பட அனைவரும் கேலியாக சிரித்தனர். 

ஹனுமான் இவர்கள் செய்யும் அட்டகாசங்கள், கேலிகள் அனைத்தையும் பார்த்தும், பொறுமையாகவே இருந்தார்.

இதற்கிடையில் ஸீதா தேவியிடம் அங்கிருந்த ராக்ஷஸிகள் 'உன்னை பார்க்க வந்த தூதன் பிடிபட்டு விட்டான். இன்று அந்த வானரன் வாலில் தீ வைத்து, ஊர் முழுக்க இழுத்து கொண்டு போகிறார்கள்" என்று சொல்ல, 

சீதா தேவி 'என் கணவனுக்கே நான் சேவை செய்தது உண்மையென்றால், நான் பதிவ்ரதை என்பது உண்மை என்றால், ராமபிரானின் ஒழுக்கம் உண்மை என்றால், ஏ அக்னியே! ஹனுமானை நீ தொடும் போது, குளிர்ச்சியாக இரு' என்று பிரார்த்தித்தாள்.

அதே சமயத்தில், வாலில் வைத்து இருந்த தீ, திடீரென்று குளிர்ந்த நீர் பட்டது போல ஆனதை உணர்ந்தார் ஹனுமான்.

உடனே உற்சாகம் அடைந்த ஹனுமான், இது வரை கேலி செய்து கொண்டிருந்த ராக்ஷஸர்களுக்கு ஒரு பாடம் புகட்ட, இலங்கையையே தீயிட்டு விட்டார்.

ஒவ்வொரு மதில் சுவராக தாவி, விபீஷணன் மாளிகையை மட்டும் விட்டு விட்டு, ராவணன் மாளிகை உட்பட அனைத்தையும் தீயிட்டு விட்டார்.