05.12.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
05.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: மற்றவர் பணியை நீங்களே செய்ய வேண்டிய சூழ்நிலை இன்று அமையும்.
பரணி: மாணவர்களுக்கு உதவி செய்து பாராட்டு பெறுவீர்கள்.
கார்த்திகை 1: உங்களின் புகழ் அதிகரிக்கும். முன்பிருந்த மனக்குறைகள் தீரும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: பணியாளர்களின் பிரச்னைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும்.
ரோகிணி: பிறர் விஷயங்களில் அறிவுரை சொல்லாமல் இருப்பது நல்லது
மிருகசீரிடம் 1,2: மனஅழுத்தம் வந்து நீங்கும். குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் முடிவாகும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம் தேவை.
திருவாதிரை: பயணத்தால் சிறிய நன்மை கிடைக்கும். வருமானம் பெருகும்.
புனர்பூசம் 1,2,3: உறவினர்களின் உதவி கிடைக்கும். சிக்கல் ஒன்று தீரும்.

கடகம்: 
புனர்பூசம் 4: குடும்பம் மகிழும். வியாபார முயற்சி ஒன்று நற்பலனைத் தரும்.
பூசம்: புதிய திட்டங்களை கவனமாகத் தீட்ட வேண்டும். நட்பு வட்டம் விரியும்.
ஆயில்யம்: மனதில் தைரியம் அதிகரிக்கும். நல்லவர்களின் அன்பு கிடைக்கும்.

சிம்மம்: 
மகம்: வெளிநாட்டில் இருந்து வருமானம் வர இன்று அதிகம் வாய்ப்பு உண்டு.
பூரம்: உடல் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். புது வேலை கிடைக்கும்.
உத்திரம் 1: உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: எதையாவது கற்பனை செய்து வீண் குழப்பம் அடையாதீர்கள்.
அஸ்தம்: அலுவலக வேலைகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.
சித்திரை 1,2: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கவலை ஒன்று நீங்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: திறம்பட பணி செய்து மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள்.
சுவாதி: சொத்து வாங்க செய்த முயற்சிகள் உங்களின் விருப்பப்படி நிறைவேறும்.
விசாகம் 1,2,3: திருமணம் பற்றிய பேச்சுக்கள் நல்லபடியாக முடியும். பயம் தீரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: உங்கள் வேலையை வேறு ஒருவரிடம் ஒப்படைக்காதீர்கள்.
அனுஷம்: அடுத்தவர்களை நம்பி உங்களது பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்
கேட்டை: எதிர்பாராதபடி நல்ல செய்தி ஒன்று வெளிநாட்டில் இருந்து வரும்.

தனுசு: 
மூலம்: தடைப்பட்ட சுபவிஷயங்கள் இன்று நடக்க ஏற்பாடாகி நிம்மதி தரும்.
பூராடம்: எதிர்பார்த்த பணம் வரும். தர்ம செயல்கள் செய்வீர்கள். பயம் நீங்கும்.
உத்திராடம் 1: மனக்கசப்புக்கள் அகலும். குடும்பத்தில் குதுாகலம் நிறையும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: நல்ல காரணங்களுக்காக இன்று பணம் செலவழியும்.
திருவோணம்: கலகலப்பான சூழலை அனுபவிப்பீர்கள். உங்களின் குறை ஒன்று தீரும்.
அவிட்டம் 1,2: குடும்பத்தினருடன் புரிதல் அதிகமாகும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் சிறு பிரச்னை ஏற்பட்டு சரியாகும்
சதயம்: புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்து கலகலப்பு கூடும்.
பூரட்டாதி 1,2,3: சிறு கவலை ஒன்று தீரும். மனநிம்மதி அதிகரிக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: உங்களின் கலகலப்பான சுபாவம் காரணமாக நட்பு வட்டம் விரியும்.
உத்திரட்டாதி: குழப்பங்கள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.
ரேவதி: பணியாளர்கள் புதியவர்களிடம் எச்சரிக்கையாக இருந்தால் நல்லது.