மேலும் இருவருக்கு ஒமிக்ரோன்
ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்துக்கு வந்த 72 வயது முதியவருக்கும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு வந்த ஒருவருக்கும் ஒமிக்ரோன் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலமாக இந்தியாவில் ஒமிக்ரோன் கொரோனா வகை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக, குஜராத்தின் ஜாம்நகா் மாநகராட்சி ஆணையா் விஜய்குமாா் கராடி கூறுகையில், ‘‘ஜாம்நகரைச் சோ்ந்த முதியவா், கடந்த பல ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் வசித்து வருகிறாா்.
தனது உறவினரைக் காண்பதற்காக கடந்த மாதம் 28 ஆம் திகதி குஜராத்துக்கு வந்த அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது.
மருத்துவா்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் அவா் ஆா்டி - பிசிஆா் பரிசோதனை மேற்கொண்டாா்.
அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கடந்த 2 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.
அதை அடுத்து குரு கோவிந்த் சிங் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்துதல் வாா்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.