06.12.2021 இன்றைய ராசி பலன்

Prasu
2 years ago
06.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: மேலதிகாரி கொடுத்த வேலையை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
பரணி: குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பரபரப்பான நாள்.
கார்த்திகை 1: உழைப்புக்கு பலன் உண்டு. லாபகரமான ஆர்டர்கள் வரும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: ஒருவருடைய வழி நடத்துதலால் வாழ்க்கையில் உயர்வீர்கள்.
ரோகிணி: தேவையற்ற மனஸ்தாபங்கள், வீண் பகைக்கு இடம் தர வேண்டாம்
மிருகசீரிடம் 1,2: நேர்மறை எண்ணங்கள் வரும். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: இதுவரை இருந்து வந்த பிரச்னை நீங்கும். மன அமைதி கூடும்.
திருவாதிரை: பல தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். நட்பு வட்டம் விரியும்.
புனர்பூசம் 1,2,3: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புது வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கடகம்: 
புனர்பூசம் 4: குடும்ப உறவுகள் சுமுகமாகும். பேச்சால் பிறரை கவருவீர்கள்.
பூசம்: பணியிடத்தில் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். கவலையற்ற நாள்.
ஆயில்யம்: நஷ்டங்கள் குறையும். கலைத்துறையினருக்கு ஆதாயங்கள் உண்டு.

சிம்மம்: 
மகம்: சகோதர உறவுகள் உங்களுக்கு கைகொடுக்கும். வெற்றி கூடுதலாகும்.
பூரம்: மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். குதுாகலம் கூடும்.
உத்திரம் 1: இளம் வயதினருக்கு புதிய கதவுகள் திறக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: இழந்த மன தைரியம் கிடைத்துவிடும். முன்னேற்றமான நாள்.
அஸ்தம்: குடும்ப உறவுகளின் அக்கறையும், அன்பும் உங்களை நெகிழ வைக்கும்.
சித்திரை 1,2: அலுவலகத்தில் இருந்து வர வேண்டிய பணம் இன்று வரும்.

துலாம்: 
சித்திரை 3,4: மன அமைதி அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சுவாதி: மகிழ்ச்சியான மனநிலை நிலவும். கவலைகள் முடிவுக்கு வரும்.
விசாகம் 1,2,3: மனதில் உற்சாகம் களைகட்டும். பேச்சில் கவனம் தேவை.

விருச்சிகம்: 
விசாகம் 4: வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ளவும். யோகமான நாள்.
அனுஷம்: மென்மையான அணுகுமுறையால் மற்றவர்களைக் கவர்வீர்கள்.
கேட்டை: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும்.

தனுசு: 
மூலம்: வயிற்று உபாதைகள் வராதபடி உணவு விஷயத்தில் கவனம் தேவை
பூராடம்: சிலருக்கு அலைச்சல் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் குறையாது.
உத்திராடம் 1: எதிலும் நிதானப்போக்கு இருந்த நிலை மாறி நிம்மதி வரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 
திருவோணம்: நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். சுபச்செலவு அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: வெளிநாட்டில் இருந்து வருமானம் வரும். உறவினர் உதவி செய்வர்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பேச்சில் நிதானம் அவசியம். பணியில் பரபரப்பு இருக்கும்.
சதயம்: குடும்பத்தினருடன் இணக்கமான சூழல் மலரும். நட்பு வட்டம் விரியும்.
பூரட்டாதி 1,2,3: குழந்தைகளால் ஏற்பட்டிருந்த மன வருத்தங்கள் தீரும்.

மீனம்: 
பூரட்டாதி 4: வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு சிலருக்கு உருவாகும்.
உத்திரட்டாதி: மனக் குழப்பங்கள் நீங்கி வாழ்வில் நம்பிக்கை பிறக்கும்.
ரேவதி: தேவையற்ற வாக்குறுதிகளை யாருக்கும் தர வேண்டாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!