விநாயகப்பெருமான் கனவில் வந்தால் என்ன பலன்?

#spiritual #God
விநாயகப்பெருமான் கனவில் வந்தால் என்ன பலன்?

நமது கனவில் இறைவன் விநாயகர் வந்தால் அது நல்லது ஆகும். விநாயகரை விக்னஹர்த்தா என்றும் அழைப்பர். அதாவது தடைகளை நீக்குபவர் என்று அர்த்தம். இவர் சிவன், பார்வதியின் மூத்த புதல்வராவார். அதனால் இவரை முழுமுதற்கடவுள் என்று கூறுகிறோம்.

அதனால் மக்கள் எந்த ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்பும் அல்லது எந்த ஒரு புனிதமான நிகழ்வுக்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டுதான் தொடங்குவா். தடைகளை தகர்ப்பவர் விநாயகரின் பக்தா்கள் தாங்கள் தொடங்கவிருக்கும் எந்த ஒரு செயலிலும் தடங்கல்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக, அவரை வழிபட்டுதான் தொடங்குவா்.

தடைகளை தகர்ப்பவர்

விநாயகாின் பக்தா்கள் தாங்கள் தொடங்கவிருக்கும் எந்த ஒரு செயலிலும் தடங்கல்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக, அவரை வழிபட்டுதான் தொடங்குவா்எனவே விநாயகர் பூஜை என்பது மிகவும் முக்கியமான, அதே நேரத்தில் புனிதமான ஒன்றாகும்.

ஆகவே ஒருவா் தனது கனவில் விநாயகரைக் காண்கின்றார் என்றால் அவா் விரைவில் வெற்றி பெற இருக்கிறார் என்று பொருள்.

நன்மைக்கான அடையாளம்

முழுமுதற் கடவுளான விநாயகருக்கும், புனிதத்திற்கும் அல்லது நன்மைத் தனத்திற்கும் (சுபம்) இடையே நெருங்கிய தொடா்பு உண்டு.

அவா் நன்மையை வழங்குபவா். ஆகவே ஒருவா் விநாயகரைத் தனது கனவில் பார்த்தால், அவா் விநாயகாரின் நன்மைகளை விரைவில் பெறுவார் என்று பொருள்.

மகிழ்ச்சி கிட்டும்

இறைவன் விநாயகர் சுக்கார்த்தா என்று அழைக்கப்படுகிறார்.

சுக்கார்த்தா என்றால் நன்மையைச் செய்பவா் அல்லது மகிழ்ச்சியைப் பொழிபவா் என்று பொருள். ஆகவே ஒருவா் விநாயகரைத் தனது கனவில் கண்டால், அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று பொருள்.

புது தொடக்கத்தின் அடையாளம்

இறுதியாக, ஒருவா் விநாயகரைத் தனது கனவில் காண்கிறார் என்றால், அவா் விரைவில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில், ஒரு புதிய அத்தியாயத்தை அல்லது புதிய தொழிலை அல்லது வேலையைத் தொடங்கப் போகிறார் என்று பொருள்.

மறந்ததை நினைவுபடுத்தும்

சில நேரங்களில் நாம் ஏற்கனவே எடுத்திருக்கும் உறுதிமொழிகளை நினைவுறுத்துவதற்காகவும், நமது கனவில் விநாயகர் வருவார் என்று சொல்லப்படுகிறது. சில நேரங்களில் சிலவற்றைச் செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்திருப்போம்.

ஆனால் அவற்றை செய்யாமல் மறந்து இருப்போம். ஆகவே நாம் மறந்தவற்றை நினைவு படுத்து முகமாக அவர் நம் கனவில் வந்து ஞாபக மூட்டுகிறார். ஆகையால் நாம் அவரை ஏதும் வேண்டியிருந்தால் அதனை செய்யாதுவிடுத்தலாகாது.