இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 07-12-2021
Mugunthan Mugunthan
3 years ago

பொன்மொழி - 01 -
தலைப்பு:-ஆறுதல்
அடியே படாமல்
வலிக்க செய்வது
வார்த்தைகள் மட்டுமே
மருந்தே இல்லாமல்
காயத்தை
குணப்படுத்துவது
அன்பான
ஆறுதல் மட்டுமே...!
.jpeg)
பொன்மொழி - 02-
தலைப்பு:-சோகம்
சோகங்கள் நமக்கு
சொந்தமானது அல்ல.
அதை
தக்கவைத்துக் கொள்வதும்
தகர்த்தெறிவதும்
அவரவர்
துணிவில் தான்
இருக்கிறது.

பொன்மொழி - 03 -
தலைப்பு:-கேள்
ஒன்றின் மதிப்பு
தெரிய வேண்டுமா....
கேள்!
அனாதையிடம் கேள்
தாயை பற்றி,
திக்கு தெரியாதவரிடம் கேள்
தந்தையை பற்றி,
கல்லாதவரிடம் கேள்
அறிவை பற்றி,
இல்லாதவரிடம் கேள்
பொருளின் மதிப்பை பற்றி,
துணை இழந்தவர்களிடம் கேள்
தனிமையை பற்றி.
.jpeg)
பொன்மொழி - 04 -
தலைப்பு:-உண்மை
உண்மைகள் சில
நேரங்களில்
தொலைந்து தான்
போகுமே தவிர...
ஒரு போதும்
தோற்றுப் போகாது.

பொன்மொழி - 05 -
தலைப்பு:-வழிநடத்தல்
உன்னை
வழிநடத்த
அறிவை
பயன்படுத்து
மற்றவர்களை
வழிநடத்த
இதயத்தை
பயன்படுத்து




