செட்டிநாடு மசாலா மீன் வறுவல் சமைத்துப் பாருங்கள்...
#Cooking
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள்:
- வஞ்சிர மீன் – அரை கிலோ
- மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
- சோம்பு – ஒரு தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் – 7 சின்ன
- வெங்காயம் – 6
- பூண்டு – 5 பல்
- கறிவேப்பிலை – 10 இலை
- புளி – சிறிதளவு
- உப்பு – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
- சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை, புளி, மிளகாய் வற்றல், வெங்காயம், உப்பு மற்றும் மஞ்சள் தூள் இவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- பிறகு மீன் துண்டுகளில் அரைத்த விழுதை தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடு வந்ததும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து எடுக்க வேண்டும்.