முகக்கவசங்களில் தற்போது மூன்றடுக்கு முகக்கவசம்.

#Health #Covid 19
முகக்கவசங்களில் தற்போது மூன்றடுக்கு முகக்கவசம்.

கொரோனா தடுப்பு பெற்றுக்கொண்டிருந்தாலும் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவது குறைவு. இது பாதுகாப்பற்றவொன்றாகும். முகக்கவசங்களில் சிறப்பான முகக்கவசம் ஒன்று உள்ளது.

துணியால் செய்யப்பட்ட முகக்கவசம், சாதாரண ஒற்றை அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க், மூன்றடுக்கு முகக்கவசம், N95 முகக்கவசம் என பல வகைகளில் முகக்கவசங்கள் விற்பனைக்கு உள்ளன. துணியினாலான முகக்கவசம் கொரோனா பரவுதலை பொறுத்தமட்டில் எந்த நற்பயனையும் தருவதில்லை. அதேபோல் சர்ஜிக்கல் மாஸ்க் எனும் ஒற்றை அடுக்கு முகக்கவசமும் முழுமையான பாதுகாப்பை தருவதில்லை.

மூன்றடுக்கு முகக்கவசமே முழுமையான பாதுகாப்பை தரும். பொதுமக்கள் மூன்றடுக்கு முகக்கவசம் அணிவதே போதுமானது. முழுப்பாதுகாப்பு அளிக்கும் மூன்றடுக்கு முகக்கவசம் தொடர்ச்சியாக 6 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். அதன்பின் அதனை சரியான முறையில் பாதுகாப்பாக உயிர்கழிவு மேலாண்மை திட்டத்தின் அறிவுறுத்தலின்படி கழிவு நீக்கம் செய்ய வேண்டும்.

ஒரு முறை பயன்படுத்திய மூன்றடுக்கு முகக்கவசத்தினை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது கூடாது.இவ்வாறு செய்யும்போது நோய் தொற்று மற்றும் பரவல் ஏற்படும் வாய்ப்புள்ளது. சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றைய நோயாளர்களிடையே நேரடி தொடர்பில் இருப்பவர்கள் N95 வகை முகக்கவசங்கள் அணியலாம்.

நீங்களும் இவ்வாறான முகக்கவசங்களை அணிந்து நிகழ்வுகள் மற்றும் வெளியிடங்களுக்கு சென்றால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4