நம்பிக்கை வைக்கும் அன்பர்களுக்கு பாபா எப்போதும் துணை நிற்பார்
வலியவருக்கு வேண்டியதை தரும் வள்ளலாக வாழ்ந்து மறைந்த ஷீரடி சாய்பாபா. மகாராஷ்டிராவில் ஓடும் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் ஷீரடி. 18ம் நூற்றாண்டு தொடக்கத்தில் அங்குள்ள பழமையான மசூதிக்கு பின்னே சிறுவன் ஒருவன் தியானம் செய்தான்.
அவனது முகத்தில் ஒளிர்ந்த தேஜஸை பார்த்த கிராமத்து தலைவர் மனைவி தினமும் அந்த சிறுவனுக்கு உணவு கொண்டு வந்து கொடுக்கத் தொடங்கினார். அப்போது அதே பகுதியில் வசித்து வந்த கோயில் பூசாரி ஒருவர் சிறுவனை சாய் என்று அழைத்தார்.
அந்த கிராமமே சிறுவன் சாயை தெய்வீக அருளுடன் பார்த்து வந்த சூழ்நிலையில், திடீரென அவன் ஷீரடியிலிருந்து காணாமல் போனான். ஊரே அவனை தேடிய நிலையில், மீண்டும் சாய் ஷீரடிக்கு விஜயமானான். அப்போது அவனக்கு வயது பதினாறு. மீண்டும் ஷீரடி வந்த சிறுவன் சாயை ஊர்மக்கள் கடவுளைப் போன்று வழிபட துவங்கினார்கள்.
சாய் என்பதுடன் பாபாவை இணைந்து சீரடி மக்கள் அவனை சாய்பாபா என்று அழைத்தனர். சாய்பாபாவை பற்றி தகவல்கள் ஊர்முழுக்க பரவியது. பல பகுதிகளிலிருந்து அவரை தேடி மக்கள் ஷீரடிக்கு வர தொடங்கினர். மக்களின் துயரங்களுக்கு விடியலாகவும், அவர்களது இன்னல்களுக்கு மருந்தாகவும் சாய்பாபா பல அற்புதங்களை செய்தார்.
கடவுள் கிருஷ்ணனை வணங்கியபடி, மசூதியில் தங்கி வந்த அவர் மீது இந்து, இஸ்லாம் மக்கள் வேறுபாடு காட்டமல் அன்பு பாராட்டினர். சாய்பாபாவுக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் அவருக்கு வக்கீல் பட் என்பவர் அறிமுகமானார். அப்போது அவரிடம் தான் ஜீவசமாதி அடையை வீடு கட்டி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே அவர் கட்டிக் கொடுத்தார். மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் அன்பு பாராட்டிய சாய்பாபா, 1918ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாளில் ஜீவசாமாதி அடைந்தார். அன்று முதல் மக்கள் அவரை கடவுளாக வழிபடத் தொடங்கினர்.
நம்பிக்கை வைக்கும் அன்பர்களுக்கு பாபா எப்போதும் துணை நிற்பதாக அவரது பக்தர்கள் கருதுகின்றனர். ஜீவசமாதி அடையும் சாய்பாபா துவாரகாமாயீயில் தீ மூட்டிவிட்டுச் சென்றார். அந்த நெருப்பு இன்றும் அணையாமல் உள்ளது. அதில் வரும் சாம்பலை பக்தர்கள் விபூதி பிரசாதமாக ஈடுக்கொண்டனர்.
நாட்டில் உள்ள பல்வேறு சாய்பாபா கோயில்களில் விபூதி தான் முக்கிய பிரசாதமாக விளங்குகிறது. மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து மறைந்த தெய்வங்களான பல மாகன்கள் இருந்த போதிலும், மதம், மொழி, இனம் போன்ற அடையாளங்களை கடந்து வலியவர்களுக்கு அற்புதம் செய்யும் தெய்வமாக போற்றப்படுகிறார் ஷீரடிசாய்பாபா.