09.12.2021 இன்றைய ராசி பலன்

Prasu
2 years ago
09.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: நெருங்கிய உறவினர்களை இன்று சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
பரணி: பெரியவர்களின் ஆசி கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.
கார்த்திகை 1: அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். உங்களின் மனம் குளிரும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: மனநிறைவு தரும் செயல்களை செய்து திருப்தி அடைவீர்கள்.
ரோகிணி: வாழ்க்கைத் துணைவரால் மிகுந்த நலம் உண்டாகும்.
மிருகசீரிடம் 1,2: வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் நன்மை உண்டு

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: பணியிடத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.
திருவாதிரை: சாதுர்யமாக செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். சேமிப்பில் ஆர்வம் கூடும்

கடகம்: 
புனர்பூசம் 4: உங்களின் பேச்சு, செயல்களில் அதிக கவனம் தேவை.
பூசம்: சகோதர சகோதரிகளுக்குள் ஒற்றுமையும் நன்மையும் ஏற்படும்.
ஆயில்யம்: நண்பர்களிடம் இருந்து உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்: 
மகம்: எதிர்பாலின நட்புகளால் நன்மைகள் அதிகரிக்கும். மகிழ்ச்சி கூடும்.
பூரம்: யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
உத்திரம் 1: வேலை தேடியவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கூடிவரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கூடும். மன நிறைவு வரும்.
அஸ்தம்: அலுவலகத்தில் இருந்த நிம்மதியற்ற சூழ்நிலை இன்று மாறும்.
சித்திரை 1,2: அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: புதுமை படைப்பீர்கள். நட்பு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
சுவாதி: சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத் தாங்கல்கள் நீங்கும்
விசாகம் 1,2,3: உடன்பிறந்தவர்களால் நன்மையும், லாபமும் உண்டாகும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: பங்குச்சந்தை, கமிஷன் போன்ற வகைகளில் பணம் வரும்.
அனுஷம்: மனதிற்கு இனிய சம்பவங்கள் இன்று நிகழும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கேட்டை: எதிர்ப்புகள் விலகும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்

தனுசு: 
மூலம்: உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகுவார்கள். நிதான நன்மை உண்டு.
பூராடம்: உங்களின் புதிய முயற்சிகளுக்கு மேலதிகாரியின் ஆதரவு இருக்கும்.
உத்திராடம் 1: அரசு வகையில் உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆசி உண்டு

மகரம்: 
உத்திராடம் 2,3,4: உங்களின் எதிர்காலம் சம்பந்தமான எண்ணம் ஒன்று நிறைவேறும்.
திருவோணம்: உங்களது பேச்சினால் ஏற்பட்ட பிரச்னைகள் இன்று தீரும்.
அவிட்டம் 1,2: பணியிடத்தில் உங்களுக்கு பெருமை தரும் நிகழ்ச்சி ஒன்று நடைபெறும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: உங்களின் குழந்தைகள் மேடை ஏறிக் கைதட்டல் வாங்குவார்கள்.
சதயம்: குடும்பத்தில் யாருக்கேனும் ஒருவருக்கு சுபநிகழ்ச்சி நடைபெறும்.
பூரட்டாதி 1,2,3: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் மாறும்.

மீனம்: 
பூரட்டாதி 4: நெருங்கிய உறவினர்களுடன் வாக்கு வாதம் செய்ய வேண்டாம்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் பெரிய பொறுப்புகளை நிறைவேற்றி வெல்வீர்கள்.
ரேவதி: நண்பர் ஒருவர் மூலம் உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.