நாசாவின் சிறந்த 10 விண்வெளி வீரர்களுள் ஒருவர் இந்தியர்

Nila
2 years ago
நாசாவின் சிறந்த 10 விண்வெளி வீரர்களுள்  ஒருவர் இந்தியர்

தற்போது நாசா தேர்ந்தெடுத்திருக்கும் இந்த 10 விண்வெளி வீரர்களும், 2 ஆண்டு பயிற்சி முடிந்த பின், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்துக்கான நாசாவின் திட்டங்களில் பங்கெடுக்கவிருக்கிறார்கள்.

தங்களது விண்வெளித் திட்டங்களுக்கான புதிதாக 10 விண்வெளி வீரர்களின் பெயர்களைக் கடந்த திங்கள்கிழமை அறிவித்தது நாசா. நாசாவைச் சேர்ந்த பில் நெல்சன் இந்த 10 வீரர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். நாசாவில் விண்வெளிப் பணிகளுக்காக சுமார் 12,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்த இரண்டு வருடங்களுக்கு இவர்களுக்கு விண்வெளியில் பணி செய்வதற்கான தீவிரமான பயிற்சிகள் அளிக்கப்படவிருக்கின்றன. நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 10 பேர் கொண்ட குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில்மேனனும் ஒருவர்.

அனில் மேனன் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரும் நாசாவின் விண்வெளித் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த சங்கரன் மேனன் என்பவருக்கும், உக்ரைனைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பிறந்தவர் அனில் மேனன். அமெரிக்காவின் மினுசோட்டா மாநிலத்தில் உள்ள மின்னியாபொலிஸ் என்ற நகரத்தில் பிறந்தார்.

1999-ல் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நியூரோபயாலஜியில் இளங்கலைப் பட்டமும், 2004-ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார் அனில் மேனன். அதன் பின்னர் 2006-ல் ஸ்டான்போர்டு மெடிகல் ஸ்கூலில் MD (Doctor of Medicine) பட்டமும் பெற்றிருக்கிறார் இவர். மேலும், அவசரக்கால மருத்துவம் மற்றும் விண்வெளி மருத்துவம் ஆகியவற்றில் பயிற்சியும் பெற்றிருக்கிறார்.

SPECIAL OFFER: உங்கள் விகடனின் ரூ.1749 மதிப்பிலான 1 வருட ஆன்லைன் சந்தா ரூ.999 மட்டுமே! மேலும் இதனுடன் 1 மாத சந்தா இலவசமாக பெறுங்கள். சந்தா செலுத்த!

அமெரிக்காவின் ஏர் ஃபோர்ஸில் லெப்டினன்ட் கர்னலாக பதவியில் இருந்த இவர், அப்போது ஃப்ளைட் சர்ஜனாகவும் (Flight Surgeon) ஏர் ஃபோர்ஸில் பணியாற்றியிருக்கிறார். எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதல் ஃப்ளைட் சர்ஜனாக இருக்கும் இவர், முதன் முதலில் ஸ்பேன் எக்ஸ் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பிய Demo-2 மிஷனிலும் பங்காற்றியிருக்கிறார்.

நாசாவில் பல்வேறு திட்டங்களிலும் Crew Flight Surgeon ஆகவும் பணியாற்றியிருக்கிறார் அனில் மேனன். 2010-ல் ஹயாட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம், 2011-ல் ரெனோ ஏர் ஷோவில் ஏற்பட்ட விபத்து மற்றும் 2015-ல் நேபாளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகிய பேரிடர்களில் மருத்துராகப் களப்பணியாற்றியிருக்கிறார்.

தற்போது நாசா தேர்ந்தெடுத்திருக்கும் இந்த 10 விண்வெளி வீரர்களும், 2 ஆண்டு பயிற்சி முடிந்த பின், நிலவு மற்றும் செவ்வாய்க் கிரகத்துக்கான நாசாவின் திட்டங்களில் பங்கெடுக்கவிருக்கிறார்கள்.