யார் இந்த விபின் ராவத்?
இந்திய முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில், அவரது மனைவி உட்பட ராணுவ உயரதிகாரிகள் 14 பேர் நேற்று உயிரிழந்தனர்.
இந்திய முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் 2016ஆம் ஆண்டின்டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியன்று, இந்திய இராணுவத்தின் 27ஆவது தலைமைத் தளபதியாக நியமிக்கப் பட்டார் பிபின்ராவத். தலைமைத் தளபதி யாகப் பதவியேற்பதற்கு முன்பு, துணை தலைமைத் தளபதியாகப் பணியாற்றிவந்தார்.
உத்தராகண்ட்டில் பிறந்த பிபின் ராவத் தின் குடும்பம், பல தலைமுறைகளாகத் தொடர்ந்து இராணுவத்தில் பணியாற்றுகிறது. ஜெனரல் பிபின் ராவத்,சிம்லாவில் உள்ள சென். எட்வார்ட் பள்ளியில் படித்தார்.
அதன்பின்னர், டெஹ்ராடூனிலும், தமிழகத்தின் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். பின்னர், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார்.
சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம். பில் பட்டம் வழங்கப்பட்டது.
மேலாண்மை மற்றும் கணனி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார். இராணுவ போர்த்திறன் குறித்த தனது ஆய்வுக்காக, கடந்த 2011-ம் ஆண்டு, மீரட்டிலுள்ள சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார், பிபின். 1978ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், தனது தந்தை பணியாற்றிய பதினோராவது கூர்காரைபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். தொடர்ந்து, டேராடூனில் உள்ள இந்தியராணுவ பயிற்சி நிலையத்தில் இந்தியராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை வகித்தார்.
மத்திய பிராந்தியத்தில் தளபாடங்கள் பிரிவு அலுவலராகவும் பிபின் ராவத் பணியாற்றி இருக்கிறார். மேலும், இராணுவ செயலர் பிரிவில், துணை இராணுவ செயலாளர் மற்றும் கேணல் அந்தஸ்தில் இராணுவ செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
உயர்ந்த மலைகளின்மீது போர் புரிதலிலும், ஆட்சிக்கு எதிரான ஆயுதக்குழுக்களை ஒடுக்குவதிலும் கை தேர்ந்தவராக செயல்பட்டார். நாடு முழுவதும் பல்வேறு இராணுவப் படைகளுக்குத் தலைமை தாங்கியதோடு,
இராணுவம் குறித்த கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தார்.
2008ஆம் ஆண்டு, கொங்கோ நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சார்பாக அனுப்பப்பட்ட அமைதிக்குழுவில், இந்தியாவின் பிரதிநிதிகளுள் ஒருவராகச் சென்றார். அவரின் தலைமையின் கீழ் அமைதிக்குழு மிகச்சிறப்பாகச் செயல்பட்டதாகவும், அதுவரை அமைதியாக இருந்த இந்தியாவின் அணுகுமுறை, அவரின்
தலைமைக்குப் பின் இரும்புக்கரம் கொண்டதாக மாறியதாகவும் அந்த அமைதிக்குழுவில் இருந்தவர்கள் அவரைப் பற்றி கருத்து தெரிவிக்கின்றனர்.
2015 ஜூன். இந்திய இராணுவம் மிக மோசமான ஒரு பேரிடியை சந்தித்தது. நாகாலாந்து தீவிரவாத அமைப்பு ஒன்று, மணிப்பூர் மாநிலத்தில் இந்திய இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. 18 இராணுவத்தினர் பரிதாபமாக இறந்தார்கள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பாதுகாப்பாக மியன்மார் நாட்டு காடுகளில்
சென்று பதுங்கினார்கள். இந்திய ராணுவம் இதை ஒரு கௌரவப் பிரச்னையாக எடுத்துக்
கொண்டது. உடனடியாக மியான்மர் காடுகளில் நுழைந்து சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி, அந்த தீவிரவாதிகளைக் கொன்றது.
அந்தத் தாக்குதலை நடத்தியவர், அப்போது லெப். ஜெனரலாக இருந்த பிபின் ராவத். அப்போது நாகாலாந்தில் இருந்த நேரத்தில் ஒரு ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார் ராவத். கடைசி
யில் அவர் ஹெலிகொப்டர் விபத்திலேயே தமிழகத்தில் உயிரிழந்தார்.
2016 செப்ரெம்பர். காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உரி என்ற இடத்தில் இந்திய இராணுவ முகாம் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் தீவிரவாதத் தாக்குதல் நடத்தினர். இதில் 19 இராணுவத்தினர் உயிரிழந்தனர்.
இன்னும் 20 பேர் மோசமாக காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர் பகுதிக்குச் சென்று விட்டனர். அப்போது பிபின் ராவத் இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி. எல்லை தாண்டி சென்று தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க இந்திய இராணுவம் முடிவெடுத்தது. இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை திட்டமிட்டுக் கச்சிதமாக நடத்திக் கொடுத்தார் ராவத். பாகிஸ்தான் பகுதியில் இருந்த பல தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் ராணுவம்தான் எல்லை தாண்டிச் சென்று சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் என்றிருந்த நிலையை மாற்றி, இந்திய இராணுவத்துக்கம் அப்படி ஒரு முகம் கிடைக்கக் காரணமாக இருந்தவர் பிபின் ராவத்.