பாட்டியின் இனிஷியலோடு தனித்துவமாக வாழ்ந்த எஸ்.என்.லெட்சுமி! - எஸ்.என்.லெட்சுமி அம்மாள் பற்றிய விவரங்கள்.

Prasu
4 years ago
பாட்டியின் இனிஷியலோடு தனித்துவமாக வாழ்ந்த எஸ்.என்.லெட்சுமி! - எஸ்.என்.லெட்சுமி அம்மாள் பற்றிய விவரங்கள்.

பெயரை விட, அவருடைய உருவத்தை பார்த்ததும் பலருக்கும் சட்டென்று தெரியும்.

அம்மா மற்றும் பாட்டி வேஷங்களில் பல நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர்.

எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்தவர் நாகேஷூக்கு அம்மாவாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் அமர்க்களப்படுத்தியிருப்பார்.

இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு, பாலசந்தர் என்று பலருடைய படங்களில் இவரை பார்த்திருக்க முடியும்.

படப்பிடிப்புக்கு பியட் காரில் போகிற எஸ்.என்.லெட்சுமி வயதான பிறகும் கூட, டிரைவர் வைத்துக்கொள்ளாமல் தானே காரை ஓட்டிக்கொண்டு போவார்.

தன்னுடைய வருமானத்தில் ஆண்டுக்கு இரண்டு, மூன்று பேர்களுக்கு திருமணம் செய்து வைப்பதை வழக்கமாய் வைத்திருந்தார்.

பிரபலமாக இருந்தாலும், தனிமையாக வாழ்ந்த இவருக்கு பிடித்தது தியானம். அடிக்கடி அடையாறு பிரம்ம ஞானசபாவில் இருக்கும் தியான மண்டபத்திற்குப்போய், தியானத்தில் ஆழ்ந்து விடுவார்.

அப்பாவின் பெயரை இனிஷியலாக வைப்பார்கள். அதோடு பாட்டியின் பெயரையும் யாராவது வைப்பார்களா? எஸ்.என்.லெட்சுமி அப்படித்தான் வைத்து கொண்டிருந்தார். சொர்ணத்தம்மாள் என்பது பாட்டியின் பெயர். அப்பாவின் பெயர் நாராயணன்.

இரண்டையும் சேர்த்து எஸ்.என். என்று இனிஷியலை வைத்துக் கொண்ட லெட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்பு மறையும் வரை,

செய்யும் நடிப்புத்தொழிலை திருந்த செய்து, தன்னுடைய சொந்த வருமானத்தில் யாரையும் நம்பியிராமல் வாழ்ந்த நடிகை என்பது சிறப்பு.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4