11.12.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: அரசு வகையில் அனுகூலம் உண்டு. மகிழ்ச்சியான நாள்.
பரணி: நண்பர்களால் சந்தோஷமான சூழல் உருவாகும். லாபம் கூடும்.
கார்த்திகை 1: பரபரப்பு நீங்கி அமைதியாகப் பணிகளை கவனிப்பீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். சூழ்நிலைக்கேற்ப பிறரை அனுசரித்து செல்வீர்கள்.
ரோகிணி: தம்பதி இடையே இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: மனக்குழப்பம் நீங்கி பணியில் கவனம் செலுத்துவீர்கள்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: பலநாட்கள் கழித்து மனதில் அமைதி கூடும் நாள்.
திருவாதிரை: பணியிடத்தில் நீங்கள் எடுத்த முயற்சி ஒன்று வெற்றி தரும்.
புனர்பூசம் 1,2,3: நீங்கள் திட்டமிட்ட விஷயம் ஒன்றில் சந்தோஷமான மாற்றம் உண்டு
கடகம்:
புனர்பூசம் 4: தடைப்பட்ட வருமானம் தொடர்ந்து வர ஆரம்பிக்கும்.
பூசம்: உடல்நலனில் சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் அது உடனே தீர்ந்துவிடும்.
ஆயில்யம்: பேச்சு, செயலில் இன்று மிகவும் கவனமாக இருக்கவும்.
சிம்மம்:
மகம்: இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசியலில் ஈடுபாடு அதிகரிக்கும்.
பூரம்: திட்டமிட்ட பயணம் ஒன்று தாமதப்படுவது நன்மைக்கே. குடும்பம் மகிழும்.
உத்திரம் 1: வருமான உயர்விற்கு புதிய வழியை கண்டுபிடிப்பீர்கள். பரபரப்பான நாள்
கன்னி:
உத்திரம் 2,3,4: முன்னேற்றத்தை நோக்கி இன்று அடியெடுத்து வைப்பீர்கள்.
அஸ்தம்: அரைகுறையாக நின்ற பணியை முனைப்புடன் செய்து முடிப்பீர்கள்.
சித்திரை 1,2: குடும்பத்திற்காக நேரம் செலவிட்டு அவர்களை மகிழ்விப்பீர்கள்.
துலாம்:
சித்திரை 3,4: வருமானம் கூடும். புதிய விஷயம் ஒன்றை செய்து முடிப்பீர்கள்.
சுவாதி: எப்போதோ நீங்கள் செய்த முயற்சிகள் இப்போது கைகூடும்.
விசாகம் 1,2,3: அலைபேசி மூலம் ஆதாயம் தரும் செய்தி வந்து சேரும்.
விருச்சிகம்:
விசாகம் 4: பணியாளர்களுக்கு நல்லதொரு ஆதரவுகள் இன்று கிடைக்கும்
அனுஷம்: வாகன பராமரிப்பு பணிகள் நல்ல முறையில் நிறைவடையும்.
கேட்டை: நீங்கள் எதிர்பார்த்த புதுவாய்ப்புகள் இன்று கிடைக்கும். வெற்றி அதிகரிக்கும்.
தனுசு:
மூலம்: உங்களின் புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும்.
பூராடம்: முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும்.
உத்திராடம் 1: தொழில், வியாபாரத்தை மாற்றும் எண்ணம் வேண்டாம்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: சிலருக்கு இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.
திருவோணம்: உங்களின் நல்லெண்ணம் காரணமாக பல நன்மைகளை பெறுவீர்கள்.
அவிட்டம் 1,2: மறதி காரணமாக சிறுதொல்லை ஒன்று ஏற்பட்டு நீங்கும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: குடும்பத்தினருக்கு உங்களால் மகிழ்ச்சி ஏற்படும். நட்பு வட்டம் விரியும்.
சதயம்: தம்பதி இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும்.
பூரட்டாதி 1,2,3: எந்தவொரு வேலையையும் மனத்திருப்தியுடன் செய்வீர்கள்.
மீனம்:
பூரட்டாதி 4: பெண் ஒருவரால் நன்மை உண்டாகும். சுபச்செலவு உண்டு.
உத்திரட்டாதி: பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ரேவதி: வெளியூர்களுக்கு செல்லும் போது கூடுதல் கவனம் தேவை.