கென்டக்கி பிரைட் சிக்கன் சமைக்கும் முறை
#Cooking
Mugunthan Mugunthan
2 years ago
தேவையானவை:
- சிக்கன் லெக் பீஸ் - 2 துண்டுகள்
- மிளகாய்த் தூள் - 10 கிராம்
- சீரகத் தூள் - 5 கிராம்
- மிளகுத் தூள் - 5 கிராம்
- கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
- எலுமிச்சைப் பழம் - அரை பழம் (சாறு எடுக்கவும்)
- இஞ்சி -பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
- இஞ்சி -பூண்டு பொடியாக நறுக்கவும் - 10 கிராம்
- கடலை மாவு - 10 கிராம்
- அரிசி மாவு - 5 கிராம்
- கார்ன் ஃப்ளார் - 10 கிராம்
- வெள்ளை எள் - 5 கிராம்
- பெரிய வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
- பச்சை மிளகாய் - 5 கிராம் (பொடியாக நறுக்கவும்)
- குடமிளகாய் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
- வெங்காயத் தாள் - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
- காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
- சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
- தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி அவற்றுடன் இஞ்சி -பூண்டு பேஸ்ட், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை,
- மிளகாய்த் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், உப்பு, கடலை மாவு, அரிசி மாவு, கார்ன் ஃப்ளார் சேர்த்துப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- பிறகு, எண்ணெயில் பொரித் தெடுக்கவும் (மிதமான சூட்டில் பொரித் தெடுத்தால் போதுமானது).
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடமிளகாய், வெங்காயத் தாளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதில் சிறிது தண்ணீர்விட்டு தக்காளி சாஸ், சோயா சாஸ், காய்ந்த மிளகாய் பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
- இத்துடன் பொரித்த சிக்கன் துண்டு களையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறவும். அனைத்து மசாலாக் களும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது எள் தூவி இறக்கவும்.
- தக்காளி கெட்சப் சேர்த்து சாப்பிட்டால், கெண்டகி சிக்கனின் ருசி தூக்கலாக இருக்கும்!