சென்னையில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை - மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

#India #Covid 19
சென்னையில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை -  மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யா, ஆஸ்திரியா, இஸ்ரேஸ், இங்கிலாந்து, ஜெர்மன் உள்ளிட்ட 50 நாடுகளில் ஓமைக்ரான் கொரோனா 50 வகையாக உருமாறி வருகிறது என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

1.08 கோடி பேர் இதுவரை முதல் தவணை தடுப்பூசியும்,94 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தவில்லை எனவும் கூறிய ராதாகிருஷ்ணன், பொது இடங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் எனவும் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று சராசரி 600 ஆக காணப்படுகையில் அதனை புச்சியமாக்க வேண்டுமென்றும், ஒமைக்ரோன் இன்னும் இங்கு கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்த அவர், சென்னையில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை என்றார். அத்துடன் கொரோனா விதிகளை மீறியமைக்காக சுமார் 101 கோடி ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது