12.12.2021 இன்றைய ராசி பலன்

Prasu
2 years ago
12.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: மனதில் ஏற்பட்டிருந்த திடீர்க் குழப்பம் இன்று நீங்கும்.
பரணி: எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாராத வரவு உண்டு.
கார்த்திகை 1: வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: உங்களின் செயல்களுக்கு உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பர்.
ரோகிணி: செலவை குறைத்துக்கொண்டு பண தட்டுப்பாட்டைக் குறைப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பாராத தடை ஒன்று ஏற்பட்டு நீங்கும். மனதில் உற்சாகம் மிகும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: திட்டமிட்ட பணிகள் விரைந்து முடியும். நிதி நிலை அருமையாக இருக்கும்.
திருவாதிரை: உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
புனர்பூசம் 1,2,3: நண்பர்கள், உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.

கடகம்: 
புனர்பூசம் 4: உங்களின் கூடுதல் முயற்சிகள் பலன் தரும். உடல் உபாதைகள் நீங்கும்.
பூசம்: பிரச்னையில் சிக்கினாலும் அதிலிருந்து சாமர்த்தியமாக விலகுவீர்கள்.
ஆயில்யம்: உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும்.

சிம்மம்: 
மகம்: உங்களின் பேச்சு, செயல்பாடுகளின் மூலம் நன்மை உண்டாகும்.
பூரம்: மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் உண்டாகும். உற்சாகம் கூடும்.
உத்திரம் 1: பழைய முதலீடுகள் இப்போது லாபம் அளிக்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: புதிய இனங்களில் முதலீடு செய்யும் முன் நன்றாக யோசிப்பது நல்லது.
அஸ்தம்: அலைச்சலுக்கு நற்பலன் உண்டு. உங்களின் முகப்பொலிவு பிறரை கவரும்.
சித்திரை 1,2: குடும்பத்தினருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: செலவு கூடும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்வீர்கள்.
சுவாதி: தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் தீரும்.
விசாகம் 1,2,3: விடாமுயற்சி செய்து எடுத்த செயலில் வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.
அனுஷம்: பணியிலும், கல்வியிலும் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.
கேட்டை: வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் சாதகமான பலன் உண்டு.

தனுசு: 
மூலம்: எடுத்த விஷயத்தை திறமையாக செய்து முடிக்க உங்களுக்கு உதவி கிடைக்கும்.
பூராடம்: வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். உழைப்பால் பலன் வரும்.
உத்திராடம் 1: வாழ்வில் பிடிப்பும், நம்பிக்கையும் ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.
திருவோணம்: குழந்தைகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் 1,2: மேலதிகாரிகள் முக்கிய விஷயங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: உங்களது பேச்சினால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை ஒன்று தீரும்.
சதயம்: மனதில் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
பூரட்டாதி 1,2,3: எதையும் எதிர் கொள்ளும் மன வலிமை உங்களுக்கு உண்டாகும்.

மீனம்: 
பூரட்டாதி 4: நீங்கள் எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும்.
உத்திரட்டாதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிரச்னை ஒன்று தீரும்.
ரேவதி: உங்களின் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். நிம்மதி கூடும்.