சிவன் - பார்வதியின் காதல் திருமணம வரலாறு

#spiritual #God
சிவன் - பார்வதியின் காதல் திருமணம வரலாறு

திருவெம்பாவை காலத்தில் சிவன் கதைகள் கோவில்களில் படிப்பது இயல்பு. அதன் படி இன்று சிவன் பார்வதி காதல் கதையினை சற்று சுருக்கமாக கவனிப்போமாக..

ஆதி கடவுளான சிவபெருமானுக்கு 4 மனைவிகள் உள்ளது அனைவரும் அறிந்ததே.. அண்டத்தையே ஆளும் சிவனில் ஒரு பாதி சக்தியாவர். சிவபெருமானின் 4 மனைவிகளான 'பார்வதி', 'உமா', 'துர்கா', 'காளி' ஆகியோர் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறார்கள்.
அழகு மற்றும் இளமைக்கு அடையாளமாக திகழ்பவர். காதல் மற்றும் அன்பிற்கு இலக்கணமான பார்வதி கணபதி கடவுளின் தாய் ஆவார்.

உடனடியாக சிவன் தவம் புரிந்து வரும் இடத்துக்கு பார்வதியை அனுப்பி வைத்தார் ஹிமவந்தன். இரவும் பகலும் சிவனை தரிசித்த பார்வதியின் பக்தியில் உருகினார் சிவன். எனினும், பார்வதியை சோதிக்க நினைத்து பிராமண தோற்றத்தில் பார்வதியை சந்திக்க வந்தார்.

பார்வதியிடம் பிச்சைக்காரனாக எதுவும் இல்லாமல் வாழும் சிவனை திருமணம் செய்வது நல்லதா என கேட்டதற்கு வெகுண்டெழுந்த பார்வதி சிவ பெருமானை தவிர வேறு யாரையும் திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.

இதில் சிவபெருமானின் முதல் மனைவியான பார்வதி தேவி, அகிலம் ஆளும் எம்பெருமானை கரம்பிடித்த காதல் கதை பற்றி பார்க்கலாம். மனைவியை இழந்த சோகத்தில் சிவபெருமான் தீவிர தவ நிலையை அடைந்தார். அவரது பிரச்னைகளை தீர்க்கும்படி நாரதருக்கு உத்தரவிட்டார். சிவனின் தவ நிலையை கண்டு அஞ்சிய ஹிமவந்த அரசனை சந்தித்த நாராதர் பார்வதி சிவனை நினைத்து பூஜை செய்ய வேண்டும் என கூறினார்.

உடனடியாக விஸ்வரூபம் எடுத்த சிவபெருமான் பார்வதியை தனது மனைவியாக்கிக் கொள்ள முடிவெடுத்தார். பின்னர் ஹிமவந்தன் பார்வதிக்கும் சிவா பெருமானுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார்.

இமய மலையின் அரசன் ஹிமவந்தாவும் அவரது மனைவி மேனா தேவியும் ஒரு பெண்ணை வளர்த்து சிவனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பி, முழுமுதற் கடவுளான சிவனை வேண்டி  உணவு, தண்ணீர் இன்றி தபஸ்யா யாகம் நடத்தி கடும் தவம் புரிந்தனர். இதில் மனம் குளிர்ந்த சிவனின் மனைவி கௌரி தேவி அவர்களுக்கு மகளாக பிறந்து சிவசிவ என்று கூறியதாலேயே அக்குழந்தைக்கு பார்வதி என்று பெயர் வைத்தனர்.