13.12.2021 இன்றைய ராசி பலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Reha
2 years ago
13.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: இழுபறியாக நின்ற விஷயங்கள் இன்று நல்ல முடிவுக்கு வரும்.
பரணி: வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். எதிர்பார்த்த பணம் வரும்.
கார்த்திகை 1: சற்றுக் கூடுதலாக உழைத்தால் அற்புதப் பலன் உண்டு.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: கடன்களைக் குறைப்பீர்கள். உற்சாகமாகப் பணி புரிவீர்கள்.
ரோகிணி: பணியிடத்தில் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் தீரும்

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: நினைத்ததை செய்து முடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள்.
திருவாதிரை: இழுபறியாக இருந்த பிரச்னைகள் இன்று சாதகமாக முடியும்.
புனர்பூசம் 1,2,3: விடாமுயற்சி காரணமாக சாதகமான பலன்களை பெறுவீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: மனதில் இருந்த குழப்பம் தீரும். குடும்ப பிரச்னைகள் குறையும்.
பூசம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.
ஆயில்யம்: இழுபறியாக நின்ற விஷயம் ஒன்று நல்ல முடிவுக்கு வரும்.

சிம்மம்: 
மகம்: வெளியூர் பயணங்கள் நன்மை தரும். கூடுதலாக உழைப்பீர்கள்.
பூரம்: கடன் பிரச்னை குறையும். மனதில் உற்சாகம் பொங்கும் நாள்.
உத்திரம் 1: வியாபாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் அற்புதமான நாள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: விடா முயற்சியுடன் செயல் ஒன்றில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
அஸ்தம்: குடும்பத்தினர் பற்றி மனதில் இருந்து வந்த கவலை ஒன்று நீங்கும்.
சித்திரை 1,2: கல்வி தொடர்பான பிரச்னைகள் குறையும். மனதில் தைரியம் கூடும்.

துலாம்: 
சித்திரை 3,4: முயற்சியில் வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும்.
சுவாதி: துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு நீங்கள் எண்ணியதை செய்து முடிப்பீர்கள்.
விசாகம் 1,2,3: தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இன்று ஈடுபடுவீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான பண உதவியை பெறுவீர்கள்.
அனுஷம்: குடும்பத்தில் சுபவிஷயம் ஒன்று நடைபெறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கேட்டை: குடும்பத்தினருடன் சந்தோஷமாக உங்களின் வெற்றியை கொண்டாடுவீர்கள்.

தனுசு: 
மூலம்: விருப்பப்பட்ட விஷயம் ஒன்றை இன்று செய்து முடிப்பீர்கள்.
பூராடம்: செலவுகளை குறைக்கத் திட்டமிடுவீர்கள். மனதில் இருந்த படபடப்பு நீங்கும்.
உத்திராடம் 1: பணியிடத்தில் எதிர்பாராத நல்ல திருப்பம் ஒன்று ஏற்படும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: குழந்தைகளின் முன்னேற்றத்தால் உங்களுக்கு சந்தோஷம் ஏற்படும்.
திருவோணம்: பணியாளர்களுக்கு எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.
அவிட்டம் 1,2: திறமையான செயல் ஒன்றை செய்து பிறரிடம் பாராட்டு பெறுவீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: அலுவலகத்தில் கூடுதலாக பணியாற்றி நன்மை காண்பீர்கள்.
சதயம்: இன்று எந்த விஷயத்திலும் கவனமாகச் செயல்படுவது நல்லது.
பூரட்டாதி 1,2,3: புதிய பதவிகள் காரணமாக உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: குடும்பத்தினரை அனுசரித்து செல்வது உங்களுக்கு நன்மை தரும்.
உத்திரட்டாதி: வாழ்க்கைத்துணையின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ரேவதி: பேச்சின் இனிமை, சாதுர்யம் காரணமாக கூடுதல் பலன் பெறுவீர்கள்.