21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம்!
இஸ்ரேலில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் பஞ்சாபை சேர்ந்த இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து 2021-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
21 வயதான இவர் இந்த பட்டத்தை வென்று 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பெருமையை தேடி கொடுத்துள்ளார்.
அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வாகையை சூட்டினார்.
பொது நிர்வாகத்தில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ள ஹர்னாஸ் சாந்து, பஞ்சாபி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.. இதற்கு முன்னர் கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹர்னாஸ் கொருக்கையில், "இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அழுத்தம் தங்களை நம்புவது. நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர் என்பதை அறிவது உங்களை அழகாக ஆக்குகிறது. உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள், உலகளவில் நடக்கும் முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசுவோம். வெளியே வா, உனக்காகப் பேசு, ஏனென்றால் நீ உன் வாழ்வின் தலைவன். நீயே உன் குரல். நான் என்னை நம்பினேன் அதனால்தான் இன்று இங்கு நிற்கிறேன்."