சிக்கன், மட்டனுக்கு மேலும் வலு சேர்க்கும் முட்டை கலக்கி.

#Cooking
சிக்கன், மட்டனுக்கு மேலும் வலு சேர்க்கும் முட்டை கலக்கி.

தேவையானவை:

  • முட்டை - 2
  • மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - சிறிது 
  • சிக்கன்/மட்டன் குழம்பு அல்லது சால்னா - 2 கரண்டி
  • நறுக்கிய மல்லித்தழை - சிறிது
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

  1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அந்த பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும். 
  2. பின்பு அதில் சிக்கன் / மட்டன் குழம்பு அல்லது சால்னாவை இரண்டு கரண்டி ஊற்றி, அதில் சிறிது மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். 
  3. தோசை கல் சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு, அதில் கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றவும். பாதி வெந்ததும் முட்டை கலவையை உள்புறமாக மடித்து விடவும். 
  4. நான்கு பக்கமும் மடித்து விட்டு மீண்டும் சிறிது மிளகுத்தூள் தூவி, மல்லித் தழையைத் தூவி அடுப்பை அணைக்கவும். முட்டை கலக்கி ரெடி!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4