பஞ்சமுக ஆஞ்சநேயர் தோன்றிய வரலாறு

#spiritual #God
பஞ்சமுக ஆஞ்சநேயர் தோன்றிய வரலாறு

ஆஞ்சநேயர் எப்படி பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரம் எடுத்தார் என்பதைப் பற்றிய  புராண கதை ஒன்று உள்ளது.

ஆஞ்சநேயர் பலம் நிறைந்தவர் நம்மால் ஆகாத மிகப் பெரிய காரியத்தையும் நொடி பொழுதில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்.

ராமாயணத்தில், இராவணன் ராமனுடன் போர் புரிந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் .அந்த யுத்தம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருந்தது .ஒரு முறை ராமருக்கும் ,ராவணனுக்கும் நடந்த போரில் ராவணன் நிராயுதபாணியானான் .
கருணைக்கடலான ராமன் ராவணனை கொல்ல மனமின்றி ,"இன்று போய் நாளை வா "என திருப்பி அனுப்பி விட்டார் .இதன் மூலம், ராவணன் திருந்த ராமர் ஒரு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் ,அரக்கக் குணம் படைத்த ராவணன் ராமன் அளித்த மன்னிப்பு தான் திருந்துவதற்குத்தான் என உணராமல் மீண்டும் ராமருடன் போர் புரியவே நினைத்தான்.

மயில் ராவணன் என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான் .ராமனை அழிக்க மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் ராம லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என உணர்ந்த விபீஷணன் யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்புமாறு ராமரிடம் கூறினான் .ராமர் கூறியதன் பேரில், ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர்,ஹயக்கிரீவர் ,வராகர் ,கருடன் ஆகியவர்களை வணங்கி ஆசி பெற்றார் .இந்த தெய்வங்கள் எல்லாம் போரில் அனுமன் வெற்றி பெற ,தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர்.

இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார் .
இப்படி பஞ்சமுகத்தில் அவதாரம் எடுத்ததால் பக்தரின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார் .
இவரை வழிபடுபவருக்கு , நரசிம்மனின் அருளால் எடுத்த காரியத்தில் வெற்றி ,லக்ஷ்மி கடாட்சமும்,ஹயக்கிரீவர் அருளால் அறிவாற்றலும்,ஆன்மீக பலன் ,வராகரின் அருளால் மன துணிவு ,கருடனின் அருளால் அனைத்து விதமான ஆபத்து விலகும் தன்மையும் ,ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதி ,சகல செளபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை .

பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கி எல்லா நலமும்  பெறுவோம்.