14.12.2021 இன்றைய ராசி பலன்

Prasu
2 years ago
14.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: வாழ்வில் முன்னேறும் வாய்ப்பு ஒன்று உங்களைத் தேடி வரும்.
பரணி: கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு ஒன்று இன்று கிடைக்கும்.
கார்த்திகை 1: பல தடைகளையும் தாண்டி எடுத்த செயலில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: எதிர்காலம் பற்றிய திட்டம் ஒன்றை வகுப்பீர்கள்.
ரோகிணி: நீங்கள் மதிப்பவர்களின் நன்மதிப்பை இன்று பெறுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: தொழில், வியாபாரத்தில் இருந்த தாமதங்கள் நீங்கி வேகம் பிடிக்கும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: எதிலும் நிதானத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.
திருவாதிரை: உண்மையற்ற நண்பர்களிடம் கவனம் தேவை. தாயின் அன்பு கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல்நலம் மேம்படும்.

கடகம்: 
புனர்பூசம் 4: சொத்து சம்பந்தமான விஷயங்களில் தாமதங்கள் இருக்கும்.
பூசம்: முக்கிய முடிவு எடுக்கும்போது அனுபவஸ்தர்களை கலந்தாலோசிக்கவும்.
ஆயில்யம்: பல காலமாக எதிர்பார்த்த தொகையில் ஒருபகுதி கைக்கு வரும்

சிம்மம்: 
மகம்: நெருக்கமான ஒருவருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும்.
பூரம்: வாழ்க்கைத்துணையின் முன்னேற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
உத்திரம் 1: பெரியவர்கள் கூறும் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நலம் தரும்

கன்னி: 
உத்திரம் 2,3,4: மனச்சோர்வு நீங்கும். சேமிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
அஸ்தம்: மனதில் இருந்த கவலை தீரும். முன்னேற்றமான சூழ்நிலையை காண்பீர்கள்.
சித்திரை 1,2: உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சுகமான வாழ்வு கைகூடும்

துலாம்: 
சித்திரை 3,4: சிலருக்கு அலுவலகமோ, வீடோ மாற்றம் செய்யும் சூழல் உருவாகும்.
சுவாதி: எடுத்த செயலில் வெற்றி பெறுவீர்கள். பரபரப்பான நாள்.
விசாகம் 1,2,3: தொழிலில் இருந்து வந்த தடைகள் அகன்று புதிய வழி பிறக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: உணர்ச்சிவசப்படாமல் எதையும் அணுகுவது உங்களுக்கு நல்லது.
அனுஷம்: நிறைகுறைகள் பல இருந்தாலும் மகிழ்ச்சியான நாள்.
கேட்டை: சொத்து சம்பந்தமாக மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவீர்கள்

தனுசு: 
மூலம்: குடும்பத்தினருடன் ஒருமித்த கருத்து உண்டாகி நிம்மதி அளிக்கும்.
பூராடம்: அலுவலகப் பணியில் கவனம் தேவை. நெருங்கிய உறவினர் உதவி செய்வர்.
உத்திராடம் 1: உறவினருடன் இருந்த சண்டை முடிவிற்கு வரும். பணப்பற்றாக்குறை தீரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: பிறரை நம்பி உங்களது பணிகளை ஒப்படைக்க வேண்டாம்.
திருவோணம்: பெரிய தீர்மானம் செய்யும் முன் பிறரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
அவிட்டம் 1,2: நெருங்கிய நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பாஸ்போர்ட், விசா எதிர்பார்த்தவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும்.
சதயம்: பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
பூரட்டாதி 1,2,3: வங்கி தொடர்பான விஷயங்களில் மன நிறைவடைவீர்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்திரட்டாதி: நீங்கள் விரும்பி காத்திருந்த இடமாற்றம் இன்று கிடைக்கக்கூடும்.
ரேவதி: குழந்தைகள் வெற்றி அடைந்தது பற்றிய செய்தி வரும்.