தமிழகத்தில் தி மூ கா வின் சின்ன வீடு காங்ற‌ஸ் என அண்ணாமலை கூறியது ஏன்?

Prabha Praneetha
2 years ago
தமிழகத்தில் தி மூ கா வின் சின்ன வீடு காங்ற‌ஸ் என அண்ணாமலை கூறியது ஏன்?

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு தி.மு.க. உடன் இணைத்துவிட வேண்டியதானே என பா.ஜனதா தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  அவர் பேசியதாவது:-

தமிழக காங்கிரஸ் விவசாயி அணியின் பொதுச் செயலளார் ஒருவர் உடனடியாக உதயநிதி ஸடாலினை துணை முதலமைச்சராக்குங்கள் என ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகிறார்.  அப்போ, ஏன் காங்கிரஸ் என ஒரு கட்சியை நடத்துறீங்க. கலைத்து விட்டு தி.மு.க. உடன் சேர்த்துடுங்க.

முரசொலியில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் இந்தியாவின் அடுத்த விடிவெள்ளி மு.க. ஸ்டாலின் என எழுதுகிறார். 

நீங்களே ஸ்டாலினை விடிவெள்ளி என்றால், காங்கிரஸ்காரர்களே ராகுல் காந்தியை ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லையா? என்றுதான் அழகிரியிடம் கேட்கிறோம்.

ஏற்றுக்கொண்டால் நடவடிக்கை எடுத்தீர்களா?. தமிழ்நாடு மட்டும் ரொம்ப விசித்திரம். தமிழ்நாடு காங்கிரஸ்க்கு காங்கிரஸ் என்ற தன்மையே கிடையாது. தி.மு.க.வின் ஒரு ‘பி’ டீம் ஆகத்தான் இருக்காங்க. இதில் என்ன தெரிகிறது என்றால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி கிடையாது.’’ என்றார்.