திரைப்பயணத்தை கொண்டாடிய திரிஷா

Prabha Praneetha
3 years ago
திரைப்பயணத்தை கொண்டாடிய திரிஷா

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்து இன்னும் கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா தனது திரைப் பயணத்தை கொண்டாடியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாகப் பேசப்படும் நடிகையாக இருந்தது சில்க் ஸ்மிதா மட்டும்தான். அதன் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக திரிஷா தனது திரைப்பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

மிஸ் சென்னையாகத் தேர்வு செய்யப்பட்ட திரிஷா, அதனைத் தொடர்ந்து சிம்ரன், பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக திரையுலக பயணத்தைத் தொடங்கினார். 

தற்போது வரை பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆக தயாராக இருக்கின்றன.

இந்த மகிழ்ச்சியைத் தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் திரிஷா. 

தனது டிவிட்டர் பக்கத்தில் விடுமுறை தேவையில்லாத வேலையைப் பெறுங்கள்" அதனால் நான் இந்த வேலையைச் செய்தேன். நான் இன்னும் விடுமுறையில் இருக்கிறேன்.

உங்கள் அனைவராலும் நான் இந்த இடத்தில் இன்று இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த 19 வருடங்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!