கவிதை, பெண்சிசு

Ravi
2 years ago
கவிதை,   பெண்சிசு

                       கவிதை,  

       பெண்சிசு

எட்டிக் கசப்பான 
எருக்கலம் பாலை 
புட்டி புகட்டி 
குட்டி குழ‌வி வாய் ஊட்டிக்- கொல்ல‌
எப்படி மனம் துணிந்தாய்? 
கட்டிக்கரும்பே கனியமுதே 
என அன்பைக் 
கொட்டி வளர்த்த உன் 
தாயும் பெண்ணென 
எப்படி நீ மறந்தாய்? 
ஓராயிரம் ஆணால் 
உருவாக சமூகம்- ஒற்றைப் 
பெண்ணவள் கருவால் 
உண்டாகும் என்பதை 
எண்ண‌ மறந்தாயோ? 
பேராயுதப் பெண்கரு
பிறந்திட ஆணே
பிரதானம் என்பதை 
ஏற்க மறுத்தாயோ? 
XX பெண் இனம் 
XY ஆண் இனம் 
என்பது விஞ்ஞானம் 
இதில் 
Y யதை வழங்காது 
M தைஎதிர்பார்க்கும் 
ஆணுக்கு அவமானம்... 
கற்றவர் வாய்மொழி 
பெற்று தெளி.
புரிந்திடும் ஆண் மடமை 
பெற்றவள் கண்களை உற்று கவனி 
உலகறிந்திடும் பெண் பெருமை 
தாயவள் தாய் நினைத்திருந்தால், 
தரணியில் நீயேது? 
நோய் என்றே இது நிலைத்திருந்தால் 
பூமியே கிடையாது 
                                                              :-நிஷாந்தன்-: