16.12.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: சந்தோஷமும் நிம்மதியும் குறைவின்றி இருக்கும்.
பரணி: குடும்பச் சூழல் சிக்கலின்றி இருக்கும். நிதி நிலை உயரும்.
கார்த்திகை 1: இதுவரை இருந்து வந்த தடைகள் மெல்ல விலகும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். சம்பள உயர்வு உண்டு.
ரோகிணி: கடன் குறையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: நண்பர்களின் எதிர்பாராத சந்திப்பும் ஆதரவும் உண்டு
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: பதவி உயர்வு பற்றிய செய்தி வரும். மகிழ்வான நாள்.
திருவாதிரை: வாழ்க்கைத் துணையோடு இணக்கமான சூழல் உண்டு.
புனர்பூசம் 1,2,3: உங்களின் திறமை வேகம் எடுக்கும். அறிவுத் திறன் கூடும்.
கடகம்:
புனர்பூசம் 4: பலரது உதவிகள் கிடைக்கும். பழைய வருத்தம் மறையும்.
பூசம்: சுகாதாரமான பழக்க வழக்கங்களைக் கைவிட வேண்டாம்.
ஆயில்யம்: பணியிடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.
சிம்மம்:
மகம்: குடும்பத்தினரின் பொறுப்பான செயல்பாடுகள் மகிழ்ச்சி தரும்
பூரம்: பேச்சில் கவனம் தேவை. நட்பு வட்டம் விரிவடையும்.
உத்திரம் 1: பணம் சேரும். முயற்சியில் இருந்த தடைகள் விலகும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: தொழில், பணியில் சாதகமான போக்கு நிலவி மகிழ்விக்கும்.
அஸ்தம்: பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தினரின் உதவி உண்டு.
சித்திரை 1,2: உங்கள் முயற்சியைத் தடுத்தவர் விலகுவார். கோபம் தீரும்.
துலாம்:
சித்திரை 3,4: குழந்தைகள் தங்களின் தவறை உணர்வர்.
மகிழ்ச்சியாக பொழுது போகும். சுவாதி: சிக்கல் தரும் கோபம் வேண்டாம். பேச்சைக் குறைக்கவும்.
விசாகம் 1,2,3: உங்கள் மனசாட்சிப்படி செயல்படுங்கள். குறுக்கு வழியை நாட வேண்டாம்.
விருச்சிகம்:
விசாகம் 4: உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துவீர்கள்.
அனுஷம்: சிலருக்கு இடமாற்றம் உறுதியாவதால் மகிழ்ச்சி வரும்.
கேட்டை: வாழ்வில் உயர்வு தரக்கூடிய சந்தோஷமான சந்திப்பு உண்டு.
தனுசு:
மூலம்: பிறரை குறை கூற வேண்டாம். வரவும், செலவும் சமமாயிருக்கும்.
பூராடம்: செலவில் கவனம் தேவை. மனசாட்சியின்படி நடப்பீர்கள்.
உத்திராடம் 1: முயற்சியை அதிகரிப்பதால் முன்னேற்றம் உண்டு.
மகரம்:
உத்திராடம் 2,3,4: எதிர்பார்த்த பணம் சிறு படபடப்பிற்குப் பின் வந்து சேரும்.
திருவோணம்: சொத்து தொடர்பான விஷயத்தில் இருந்த இழுபறி நீங்கும்.
அவிட்டம் 1,2: இடமாற்றம் உண்டாகும். பயணம் ஒன்று மகிழ்ச்சி தரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: சங்கடங்களும் சந்தோஷங்களும் இன்று மாறி மாறி இருக்கும்.
சதயம்: கற்பனை பயம் வேண்டாம். சேமிப்பில் ஆர்வம் உண்டாகும்.
பூரட்டாதி 1,2,3: நிதி, சொத்து பற்றி முடிவெடுப்பதில் கவனம் தேவை.
மீனம்:
பூரட்டாதி 4: வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
உத்திரட்டாதி: படபடப்பு தரும் செயல்களை இன்று செய்ய வேண்டாம்.
ரேவதி: ரிஸ்க் எடுத்து பெரிய விஷயம் எதிலும் ஈடுபட வேண்டாம்.