17.12.2021 இன்றைய ராசி பலன்

Prasu
2 years ago
17.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும்.
பரணி: உங்களது செயல் லாபத்தை நோக்கி நகரும். மகிழ்ச்சியான நாள்.
கார்த்திகை 1: பிறர் மூலம் பாராட்டு கிடைக்கும். வழக்கு சாதகமாகும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் லாபம் உண்டு. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
ரோகிணி: பணச்சிக்கல் இருக்காது. தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: திருமண முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும்.
திருவாதிரை: நண்பர்களிடம் கடந்த கால நினைவுகளை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: உறவினர்களது குடும்பங்களைச் சேர்த்து வைப்பீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: சிறு சிறு உடல் உபாதைகளுக்கு மனம் பதற வேண்டாம்.
பூசம்: குடும்பத்தில் கலகலப்பு நிலவும். முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
ஆயில்யம்: நண்பர்களின் இதமான பேச்சு மன ஆறுதலை அளிக்கும்.

சிம்மம்: 
மகம்: உங்களின் செயல் ஒன்று பலருக்கு மகிழ்ச்சியையும், நன்மையையும் தரும்.
பூரம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி வரும்.
உத்திரம் 1: உறவினர் நண்பர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து உயரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: சேமிக்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகரிக்கும். பயம் நீங்கும்.
அஸ்தம்: குடும்பத்தை சேர்ந்த ஒருவரால் பெரிய நன்மை ஒன்று வரும்.
சித்திரை 1,2: உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்த ஒருவர் அறிமுகமாவார்.

துலாம்: 
சித்திரை 3,4: தாயார் மகிழ்வார். யாரையும் மட்டம் தட்டிப் பேச வேண்டாம்.
சுவாதி: மனசாட்சிக்கு விரோதமான செயல்களை எக்காலத்திலும் செய்யாதீர்கள்.
விசாகம் 1,2,3: வியாபாரம் தழைக்கும். சகஊழியர்கள் உங்களை மதிப்பார்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: சிறப்பான நாள். உடன்பிறந்தவர்கள் அன்பாக இருப்பர்.
அனுஷம்: மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
கேட்டை: எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும்

தனுசு: 
மூலம்: பிரியமானவர்களுக்காக சில விஷயங்களை செய்வீர்கள்.
பூராடம்: உங்களால் உயர்ந்த சிலரை இன்று சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்திராடம் 1: பிறரால் பாராட்டப்படுவீர்கள். உங்களின் எதிர்பார்ப்பு பலிதமாகும் நாள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். மனக்குறை நீங்கும்.
திருவோணம்: புதிய திருப்பம் ஏற்படும். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.
அவிட்டம் 1,2: வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பணியாளர்களுக்கு பணிச்சுமையால் உடல் அசதி வந்து நீங்கும்.
சதயம்: உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லைகள் உண்டு.
பூரட்டாதி 1,2,3: உங்களது முன் கோபத்தால் நல்லவர்களை இழந்துவிடாதீர்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: சகோதர வகையில் உதவியும், அன்பும் கிடைக்கும்.
உத்திரட்டாதி: பல நாள் விரும்பிய பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள்.
ரேவதி: மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!