துவரம் பருப்பு உருண்டைக் குழம்பு சமையுங்கள்....
#Cooking
Mugunthan Mugunthan
2 years ago
தேவையானப் பொருட்கள்:
- துவரம் பருப்பு - 1/2 கப்
- பச்சை அரிசி - 1 டீஸ்பூன்
- புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
- சாம்பார் வெங்காயம் - 3
- பெரிய வெங்காயம் - பாதி
- தேங்காய் துருவல் - 1/4 கப்
- சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன் (நிறைய)
- மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
- நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- கறிவெப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
- துவரம் பருப்பு, அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு சற்று கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்த்துருவல், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள்தூள், உப்பு,
- பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து பிசைந்து, சிறு எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
- உப்பு, புளி இரண்டையும் ஊற வைத்து, தண்ணீர் சேர்த்து கரைத்து மூன்று கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
- அதில் சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தவுடன், அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொண்டு, இரண்டு அல்லது மூன்று பருப்பு உருண்டைகளை குழம்பில் போடவும்.
- குழம்பு மீண்டும் கொதிக்கும் பொழுது மேலும் இரண்டு உருண்டைகளை போடவும். இப்படியே எல்லா உருண்டைகளையும் போட்டு முடித்தவுடன்,
- ஒரு கரண்டியால், உருண்டைகளை லேசாக திருப்பி விடவும். குழம்பு மீண்டும் கொதித்ததும், தேங்காயை அரைத்து குழம்பில் விட்டு கொதிக்க விடவும்.
- கடுகு தாளித்து, அத்துடன் பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி குழம்பில் கொட்டவும்.