ஆஞ்சநேயர் திருமணம் முடித்தாரா?

#spiritual #God
ஆஞ்சநேயர் திருமணம் முடித்தாரா?

ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. ஆனால், ஆஞ்சநேயருக்கு ஒரு மனைவியும் மகரத்வஜன் என்ற ஒரு மகனும் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தில் வரும் மயில்ராவணன் கதை, கம்போடியா மற்றும் தாய்லாந்து நாட்டு ராமாயணங்கள் கூறுகின்றன.

அனுமாரைப் போன்றே அவரது மகனும் பராக்கிரமசாலியாக இருந்தார் என்பதும், அந்த மகன் `மச்சவல்லபன்’, `சுறவக்கொடியோன்’ என்று தமிழிலும், `மகரத்வஜன்’ என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படுகிறார்.

மகரத்வஜன், ஆஞ்சநேயருக்கு மகனாகத் தோன்றியது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம்.

ராம லக்ஷ்மணர்களைக் காப்பதற்காக அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறந்தபோது, அவரது உடலில் பெருக்கெடுத்த   வியர்வை கடலில் விழுந்தது. அப்போது மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவகன்னி ஒருத்தி, அந்த வியர்வையை விழுங்கினாள் என்றும், இலங்கையைத் தீக்கிரையாக்கிவிட்டு, பற்றியெரிந்த வாலை அணைப்பதற்காக அனுமார் கடலில் இறங்கியபோது அவரில் இருந்து வழிந்த வியர்வையை ஒரு தேவமச்சக்கன்னி விழுங்கினாள் என்றும் இருவிதமாகக் கூறப்படுகிறது. வியர்வையை உண்ட தேவகன்னிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் கன்னிகை, அதாவது அனுமாரின் மனைவி, `சுவர்ச்சலா’ என்றும் `சுசீலா’ என்றும் பெயர் கொண்டவர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

அனுமாரின் மகன்தான் மகரத்வஜன். ஆனால், தனக்கு மனைவி இருப்பதோ மகன் இருப்பதோகூட ஆஞ்சநேயருக்கு பிற்காலத்தில்தான் தெரியவந்தது.

ஒரு பக்கம் கதை இப்படி இருக்க_!!

நம்மூரில் அவருக்கு வேறு வகையில் அதிகாரப்பூர்வாக திருமணம் நடத்தப்படுகிறது. வியாசரின் தந்தை மகரிஷி பராசரர் எழுதிய _
*பராசரர் ஸ்ம்கிதா* என்ற அனுமனின் முழு வாழ்க்கை பதிவில், அனுமனின் குருவான சூரிய பகவான் கல்வி, இசை, கலை, வேதங்கள் என சகல வியாகரங்களையும் கற்று தருகிறார். ஒரு மணாளனாக (கணவனாக) இல்லாது நவவியாகரங்களை முழுவதுமாய் பயில இயலாது.

இதனால் சூரியன் தனது கிரணங்களால் சுவர்ச்சலாதேவி என்ற பெண்ணை தன் மகளாக உருவாக்கினார். அனுமனது பிரம்மசரியம் கெடாமல் அவருக்கு தன் மகளை திருமணம் செய்து வைத்து நவவியாகரங்களையும் பயிற்றுவிக்கிறார் மாமனார். இதனால் அனுமன் “நவவியாகரண பண்டிதன்” எனவும் அழைக்கப்படுகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!