18.12.2021 இன்றைய ராசி பலன்

#Todayrasipalan #Rasipalan #Dailyrasipalan
Reha
2 years ago
18.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். திட்டமிட்ட பயணம் தள்ளிப்போகலாம்.
பரணி: புதிய முயற்சிகள் நல்ல முறையில் நிறைவேறத் துவங்கும்.
கார்த்திகை 1: தன்னம்பிக்கை துளிர்க்கும். மகிழ்ச்சியாகப் பொழுது போகும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: மேலதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
ரோகிணி: முயற்சி ஒன்று நிறைவேறுவதற்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: குழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறை கொள்வீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: பொதுவாழ்வில் புதிய பொறுப்பு ஒன்று உங்களை தேடிவரும்.
திருவாதிரை: வெளிநாட்டில் இருந்து வரும் செய்திகள் மகிழ்ச்சி அளிக்கும்.
புனர்பூசம் 1,2,3: குடும்பம் பற்றி முக்கிய முடிவு எடுத்து நிறைவடைவீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: முயற்சியில் இருந்த தடை அகலும். சந்தோஷம் அதிகரிக்கும்.
பூசம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சி முடிவாகும். மகிழ்ச்சி கூடும்.
ஆயில்யம்: உங்களது துறையில் அனுபவசாலிகள் அறிமுகமாவார்கள்.

சிம்மம்: 
மகம்: நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடி நன்மை பெறுவர்.
பூரம்: வியாபாரத்தில் மாற்றம் ஒன்றை செய்து லாபம் ஈட்டுவீர்கள்.
உத்திரம் 1: பணியிடத்தில் உங்களின் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: குழந்தைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள்.
அஸ்தம்: முயற்சி செய்து ஆடம்பரச் செலவை குறைத்துக் கொள்வீர்கள்
சித்திரை 1,2: மேலதிகாரியின் எதிர்பார்ப்புக்கு உங்களை மாற்றிக் கொள்வீர்கள்

துலாம்: 
சித்திரை 3,4: சேமிக்கத் தொடங்குவீர்கள். பலகாலத் திட்டம் ஒன்று நிறைவேறும்.
சுவாதி: நெருங்கிய உறவினர்கள் உங்களிடம் உதவிக் கேட்டு வருவார்கள்.
விசாகம் 1,2,3: திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள். பேச்சில் கவனம் தேவை.

விருச்சிகம்: 
விசாகம் 4: வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உற்சாகமான நாள்.
அனுஷம்: அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
கேட்டை: புதிய திட்டம் தீட்டுவீர்கள். வேண்டுதலை இன்று நிறைவேற்றுவீர்கள்.

தனுசு: 
மூலம்: முக்கிய நபர் ஒருவரைச் சந்திப்பீர்கள். உங்களின் உழைப்பு அதிகரிக்கும்.
பூராடம்: உறவினர் ஒருவரிடம் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயம் தீரும்.
உத்திராடம் 1: பழைய கடனைத் தீர்க்க சிறு உதவி ஒன்று கிடைக்கும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: அநாவசியப் பொருட்கள் எதையும் வாங்க வேண்டாம்.
திருவோணம்: வியாபாரத்தில் சூட்சமங்களை கவனமாக கையாளுங்கள்.
அவிட்டம் 1,2: சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: குடும்பத்தினர் உங்களது ஆலோசனையை ஏற்று நடப்பர்.
சதயம்: நீண்ட நாளைய பிரச்னை ஒன்றிற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
பூரட்டாதி 1,2,3: விருந்தினரின் வருகையால் வீடு கலகலப்பாகும்.

மீனம்: 
பூரட்டாதி 4: மேலதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தந்து சந்தோஷப்படுத்துவர்.
உத்திரட்டாதி: பிறருக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரேவதி: பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு பிறரிடம் பாராட்டு பெறுவீர்கள்.