பணத்தை சிறப்பாக கையாளக்கூடிய ராசியினர் யார்?
நாம் அனைவரும் ஏதேனும் ஒரு வேலை அல்லது தொழில், வியாபாரம் என எந்த துறையில் நாம் சிறப்பாக பணத்தை சம்பாதித்து பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொண்டாலும், அதில் சிறிதளவு பணத்தை சேமித்து வைக்க முடியாமல் பலர் சிரமப்படுவார்கள்.
பண நிர்வாக திறன் வாய்ந்த ராசிகள்
நாம் அனைவரும் ஏதேனும் ஒரு வேலை அல்லது தொழில், வியாபாரம் என எந்த துறையில் நாம் சிறப்பாக பணத்தை சம்பாதித்து பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொண்டாலும், அதில் சிறிதளவு பணத்தை சேமித்து வைக்க முடியாமல் பலர் சிரமப்படுவார்கள்.
பலரோ சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரியளவு பணத்தை சம்பாதிக்க முடியாதவராக இருந்தாலும், அவர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தில் ஏதேனும் ஒரு பங்கு பணத்தை தன் சேமிப்புக்கு என சரியாக ஒதுக்கிவைத்துவிடுவார்கள்.
எவ்வளவு அதிகமான பணம் வருமானமாக வந்தாலும் அல்லது குறைந்த வருமானம் கொண்டவராக இருந்தாலும் அதை சரியான வகையில் நிர்வகித்து எப்படி சேமித்து வைப்பது என்றோ அல்லது அதை எதில் முதலீடு செய்து அதிகளவு பணத்தை பெருக்க முடியும் என்ற பண நிர்வாகத் திறமை அதிகமானோரிடம் இருப்பதில்லை.
அதன் காரணமாக அதிகளவில் சம்பாதித்தாலும் தன் அன்றாட வாழ்க்கைக்காக செலவிடவே சரியாக இருக்கும். அதில் சேமிப்பது சாத்தியமில்லாததாக இருக்கும்.
பணத்தை சிறப்பாக கையாளக்கூடிய நிர்வாகத்திறன் ஒரு சிலருக்கு இயற்கையிலேயே இருக்கும். அவர்களின் மன நிலையும், குணமும் பணத்தை சேமிக்கவும், அதை சரியான வகையில் நிர்வகித்து பணத்தை மேலும் பெருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இப்படி பணத்தை சிறப்பாக நிர்வாகம் செய்யக்கூடிய ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியினர் ஒரு செயலை செய்வதில் அல்லது மற்றவர்களிடமிருந்து ஏதேனும் பதிலைப் பெறுவதில் பொறுமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவர்கள் பணத்தை கையாள்வதில் மிகவும் வல்லவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பணத்தை சம்பாதிக்கும் வழிகளை கற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் இந்த விஷயத்தில் சிறப்பாக இருக்க இவர்களின் தொழில்முனைவு, துணிவு தான் அடிப்படையாக இருக்கும்.
மேஷ ராசியினர் பணத்தை சம்பாதிக்க பல வழிகளை எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தன்னிடம் உள்ள பணத்தை நிர்வாகம் செய்ய வல்லவர்களாக இருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் பெரும்பாலும் செழிப்பானவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்கள் கொண்ட இலக்கையும், குறிக்கோளையும் அடைவதில் முழுகவனம் செலுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள்.
அதுமட்டுமில்லாமல் புத்திசாலித்தனத்துடன் இருக்கக்கூடிய இவர்கள், பணத்தை அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களாகவும், அதில் ஆடம்பரமாக வாழ விரும்பக்கூடியவர்கள்.
இருக்கும் பணத்தை பல மடங்கு பெருக்க வேண்டும், சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் பணத்தை பார்த்து பார்த்து செலவழிப்பார்கள்.பணத்தை பெருக்க பெரும்பாலும் நீண்ட கால முதலீடுகளைச் செய்கிறார்கள்.
சிம்மம்
சிம்ம ராசி என்றாலே ஆளுமை எனலாம். அதிகம் பணத்தை சம்பாதிக்க வேண்டும், சேர்க்க வேண்டும் என்பதற்காக பல வழிகளைத் தேடிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் விரும்பியதை அடைய பல வழிகளில் முயற்சி செய்வார்கள். உலக பணக்காரர்களில் சிலர் சிம்ம ராசிக்காரர்கள்.
கன்னி ராசி
கன்னி ராசியினர் பரிபூரணவாதிகள். பிறரை சார்ந்து வாழ விரும்பாத கன்னி ராசியினர் தன்னுடைய சொந்த முயற்சியில் பணம், பெயர், புகழ் சம்பாதிக்க விரும்புவார்கள். எந்த விஷயத்தையும் நேர்த்தியாகச் செய்ய நினைக்கும் இவர்கள் தான் சம்பாதித்த பணத்தையும் நிர்வகிப்பதில் சிறப்பாக இருப்பார்கள்.
பணத்தை சரியான வழியில் முதலீடு செய்து அதன் மூலம் லாபம் அடையும் செய்வார்கள். எதிலும் தீர்க்கமாக செயல்படக்கூடிய இவர்கள் பணத்தை சிறப்பாக கையாள்வதில் ஆச்சரியமில்லை.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் எப்போது லாபத்தை அடையமுடியும் என்பதற்கான சூழ்நிலைகளை முன்கூட்டியே அறியக்கூடிய திறன் மிக்கவர்கள். இவர்களின் விற்பனை உத்திகள், மற்றவர்களை கவரக்கூடிய வகையில் பேசுவதும், செயல்பாடும் பெரும்பாலும் ஆச்சரியமாக இருக்கும்.
உத்தியோகத்தில் இருந்தாலும் இவர்கள் தங்களின் திறமையால் ஜொலிப்பவரளாக இருப்பார்கள். இவர்களின் பெரிய பலமே ரகசியமாக திட்டமிட்டு செயல்படுவதும், பணத்தைப் பெருக்க வேண்டும் என்ற ஆசையும் தான்