மகா சிவராத்திரி விரதம் தோன்றிய வரலாறு.
மகாசிவராத்திரி என்பது இந்து மதத்தில் கொண்டாடப்படும் சிறப்பான விசேஷமாகும். இந்த விழாவானது மாசி மாதத்தில் தேய்பிறையில் சதுர்த்தசி (14 ஆம் திதி) என்று சொல்லக்கூடிய திதியில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பாக கொண்டாடப்படும் விழா.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை முன் தினம் சதுர்த்தசியில் இருக்கும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று சொல்லப்படுகிறது.
சிவராத்திரி தோன்றிய இடம் வரலாறு:
மஹாசிவராத்திரி திருவண்ணாமலை என்ற இடத்தில் தோன்றியது. சிவன் குடியிருக்கும் பஞ்ச பூத ஸ்தலத்தில் ஒன்றான அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை சிறந்து விளங்குகிறது .
மலை யுகங்கள்:
சிவராத்திரி வரலாறு:
சதுர யுகங்கள் பல கடக்கும் நிலையில் பிரளயங்கள் ஏற்படுகிறது. ஒவ்வொரு யுகங்களிலும் அண்ணாமலையார் அருளிகிறார். அவற்றில் தான் சிவராத்திரி தோன்றியது என்கின்றனர்.
பிரம்மதேவருக்கும், விஷ்ணுவுக்கும் நான்தான் பெரியவன் என்ற விவாதம் ஏற்பட்டது. அதனால் இருவரும் கயிலை மலையில் இருக்கும் சிவபெருமானிடம் தீர்வை கேட்க சென்றனர். பிரம்மதேவரும், விஷ்ணுவும் பிரச்சனையை கூறுகின்றனர். சிவபெருமான் உடனே நான் விஸ்வரூபம் எடுக்கிறேன் என்றார்.
சிவபெருமான் எடுக்கும் விஸ்வரூபத்தை இரண்டு பேரில் யார் முதலில் அறிந்து வருகிறார்களோ அவர்கள் தான் பெரியவர் என்று தீர்வை முடிக்கிறார். சிவபெருமானின் அவதாரத்தை காண இரண்டு பெரும் செல்கின்றனர்.
சிவபெருமான் அவதாரம்:
பிரம்மதேவர் அவதாரத்தை தேடி மிகவும் சோர்வடைந்தார். திடீரென்று பிரம்மதேவருக்கு அருகில் தாழம்பூ ஒன்று தோன்றியது. அந்த பூவிடம் இவர் எங்கிருந்து வருகின்றாய் என்று விசாரித்தார். அந்த பூவானது கூறிய பதில் எம்பெருமானின் முடி உச்சியில் இருந்து வருகிறேன். இப்போது பூமியை நோக்கி செல்கிறேன் என்றது தாழம்பூ.
பிரம்மதேவர் பெரியவர் என்ற பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக தாழம்பூவிடம் ஒரு பொய் கூற சொன்னார். சிவபெருமானிடம் பிரம்மதேவர் தலையின் திருமுடியை அறிந்து விட்டார். என்னையும் அங்கிருந்து தான் எடுத்து வந்தார் என்று பொய்யாக கூறவேண்டும் என்றார் பிரம்மதேவர்.
பிரம்மதேவரும் விஷ்ணுவும்:
பிரம்மதேவர் கூறிய பொய்யிற்கு தாழம்பூ ஒத்துக்கொண்டது. சிவபெருமானிடம் விஷ்ணு என்னால் திருவடியை அடைய முடியவில்லை என்று கூறினார். அடுத்து பிரம்மதேவர் நான் திருமுடியை கண்டறிந்து விட்டேன். அதற்கான சாட்சிதான் இந்த தாழம்பூ என்றார் பிரம்மதேவர்.
பிரம்மதேவர் கூறிய பொய் செய்திகளை மாறாமல் தாழம்பூ பெருமானிடம் கூறியது. சிவபெருமான் எல்லாவற்றையும் தெரிந்துக்கொண்டு நீ பொய் செய்திகளை கூறுகிறாய். பிரம்மதேவரை பார்த்து சிவபெருமான் இந்த உலகத்தில் உனக்கான ஆன்மீக இடம் கிடையாது என்று கோபமாக கூறினார் . அடுத்ததாக சிவபெருமான் தாழம்பூவை பார்த்தும் என்னுடைய பூஜையில் இடம் இல்லை என்று கூறிவிட்டார்.
லிங்கம் உற்பத்தியான காலம்:
இது நடந்த இடம் திருவண்ணாமலையில் மாசி மாதத்தில் தேய்பிறையில் சதுர்த்தசி எனும் திதியில் நள்ளிரவில் விஸ்வரூப தரிசனத்தை சிவபெருமான் கொடுத்தார். இதனை லிங்கோத்பவ காலம் என்று அழைக்கின்றனர்.
புண்ணியம் தரும் சிவராத்திரி:
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து அன்று நடக்கும் ஆறுகால பூஜைகளையும் கண்டு தரிசனம் செய்து வந்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். நள்ளிரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் லிங்கோத்பவ கால நேரம் வரை பூஜை செய்துவந்தால் முழு பலனையும் பெற்றதாக சமம் என்று கூறுகிறார்கள்.