250 நாய்களை கொன்று பழி தீர்த்த குரங்குகள்
இந்தியாவில், தன் குட்டி ஒன்றை நாய்கள் கொன்றதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக, 250 நாய்களை கட்டிடத்தின் உச்சிக்குத் தூக்கிச் சென்று வீசியெறிந்து குரங்குகள் கொன்றதாக திகிலை ஏற்படுத்தும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
சமீப காலம் வரை குரங்குகள் சாதுவான விலங்குகளாகவே பார்க்கப்பட்டு வந்தன. ஆனால், குரங்குகள் குறித்து தற்போது வெளியாகி வரும் பல தகவல்கள், அவை சாதுவானவை அல்ல, மூர்க்கத்தனமானவை என்பதை நிரூபிப்பது போல் அமைந்துள்ளன.
தாய்லாந்தில், சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற ஒரு இடத்தில், கொரோனா காரணமாக சுற்றுலாப்பயணிகள் வராததால், சரியான உணவு கிடைக்காத குரங்குகள், கடைகளிலிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் முரட்டுத்தனமாக உணவுப்பொருட்களை பிடுங்கித் தின்னும் காட்சிகள் வெளியாகின.
இந்தியாவில், குரங்குகள் சேர்ந்து பசு ஒன்றைக் கொன்றுவிட்டதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.இந்நிலையில், மஹாராஷ்ட்ராவிலுள்ள Majalgaon என்ற கிராமத்தில், நாய்கள் சில சேர்ந்து ஒரு குரங்குக்குட்டியைக் கொன்றுவிட்டனவாம். அதைத் தொடர்ந்து, பழிக்குப்பழி வாங்குவதற்காக குரங்குகள் சேர்ந்து நாய்களைத் தாக்கி, அவற்றைத் தூக்கிச் சென்று உயரமான கட்டிடங்கள் மற்றும் மரங்கள் மீதிருந்து கீழே வீசிக் கொல்கின்றனவாம்.
இதுவரை, சுமார் 250 நாய்கள் வரை குரங்குகளால் இப்படி வீசி எறியப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனவாம்அங்கு இப்போது ஒரு நாய் கூட இல்லை என்று கூறும் கிராமவாசிகள், நாய்கள் இல்லாததால், இப்போது பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை குரங்குகள் துரத்துவதாக திகிலுடன் தெரிவித்துள்ளார்கள்.