19.12.2021 இன்றைய ராசி பலன்

Prasu
2 years ago
19.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதிய முதலீடு செய்வீர்கள்.
பரணி: புது முடிவு எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள்.
கார்த்திகை 1: வாழ்வில் முன்னேற்றம் வருவதற்கான முயற்சி பலிக்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
ரோகிணி: அலுவலகத்தில் உங்களுக்கு மரியாதை கூடும். நிம்மதியான நாள்.
மிருகசீரிடம் 1,2: விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: சுபச்செலவுகள் ஏற்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை: கலைத்துறையினரின் முயற்சிகள் நல்ல பலன் தரும்.
புனர்பூசம் 1,2,3: எதையும் யோசித்துச் செய்து பலன் அடைவீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: வீண் பேச்சு வேண்டாம். சுபச்செலவு ஒன்று உண்டு.
பூசம்: தன்னம்பிக்கையும் தைரியமும் குறையாமல் கவனமாக இருங்கள்.
ஆயில்யம்: வெளிநாட்டில் உள்ள உறவினரிடம் இருந்து நல்ல செய்தி வரும்

சிம்மம்: 
மகம்: நண்பர் ஒருவரை சந்தித்து பேசி மகிழ்ச்சி அடைவீர்கள்.
பூரம்: உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாதபடி நடந்து கொள்வீர்கள்.
உத்திரம் 1: மனக்கவலை குறையும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்

கன்னி: 
உத்திரம் 2,3,4: பணியாளர்கள் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பிரியமானவர்கள் பாராட்டுவர்.
சித்திரை 1,2: கடன் சுமையைக் குறைக்க பொறுப்புடன் பாடுபடுவீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: குழந்தைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள்.
சுவாதி: பேச்சு, செயலில் கவனம் தேவை. சேமிப்பில் ஆர்வம் கூடும்.
விசாகம் 1,2,3: வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்

விருச்சிகம்: 
விசாகம் 4: பொறுமை அவசியம். நட்பு வட்டம் விரிவடையும்.
அனுஷம்: மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம்
கேட்டை: ஓய்வு எடுப்பதற்கான முயற்சிகள் ஓரளவு பலன் தரும்

தனுசு: 
மூலம்: இளைஞர்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பூராடம்: விரயம் ஏற்படும். கூடுதலாக உழைத்து நன்மை காண்பீர்கள்.
உத்திராடம் 1: கடந்த நாட்களில் இருந்த மன உளைச்சல் நீங்கும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும். சிறு முயற்சி ஒன்று பலன் தரும்.
திருவோணம்: திடீர்த் திருப்பம் உண்டு. கலகலப்பான நாள்.
அவிட்டம் 1,2: சுப நிகழ்ச்சி பற்றிய முயற்சியில் உடனடிப் பலன் ஏற்படும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: நீங்கள் சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்திப்பீர்கள்.
சதயம்: எதிரியிடம் இருந்து விலகுவதற்கான முயற்சிகளை செய்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினரின் ஒற்றுமை காரணமாக மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: எந்தவொரு விஷயத்தையும் மிகுந்த முனைப்புடன் செய்வீர்கள்.
உத்திரட்டாதி: இன்று வரும் செய்தி ஒன்று மகிழ்ச்சி தரும். கடன் தீரும்.
ரேவதி: பல நாள் கழித்து நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.