20.12.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: மகிழ்ச்சி நிறைந்த நாள். விலை உயர்ந்த பொருளை வாங்குவீர்கள்.
பரணி: சந்தோஷச் செய்தி உண்டு. உங்களின் பயணத் திட்டம் பலிக்கும்.
கார்த்திகை 1: உங்களது விடாமுயற்சியால் வெற்றி கிடைக்கும். மனம் மகிழும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: எதிர்பாராத மாற்றம் ஒன்று நிகழ்ந்து உங்களை மகிழ்விக்கும்.
ரோகிணி: இளைஞர்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களின் சேமிப்பு உயரும்.
மிருகசீரிடம் 1,2: நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஓய்வு கிடைக்கும்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: நீண்ட கால முயற்சி ஒன்றில் வெற்றி சாத்தியமாகும்.
திருவாதிரை: நண்பர்களின் சந்திப்பு நிகழும். புது விஷயத்தை கற்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: எடுத்த விஷயம் ஒன்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
கடகம்:
புனர்பூசம் 4: எதிர்க்கருத்து உள்ளவர்கள் மெல்ல மாறி வருவார்கள்.
பூசம்: நண்பர்கள், உறவினர்களின் ஆதரவை உதாசீனம் செய்ய வேண்டாம்.
ஆயில்யம்: மன உளைச்சல் நீங்கும். மகிழ்ச்சி நிலவும். சுப நிகழ்வு உண்டு.
சிம்மம்:
மகம்: சமூகத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். சிக்கல் தீரும்.
பூரம்: உங்களின் முன்னேற்றத்திற்கு வேற்று மொழிக்காரரின் ஒத்துழைப்பு கிடைக்கும்
உத்திரம் 1: வெளியூரில் இருக்கும் குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவர்.
கன்னி:
உத்திரம் 2,3,4: பேச்சைக் குறைத்துக்கொண்டு செயலில் அக்கறை காட்டுவீர்கள்
அஸ்தம்: மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகள் தோல்வி அடைவார்கள்.
சித்திரை 1,2: உங்களின் வெற்றிக்கு வாழ்க்கைத்துணையும், நண்பர்களும் உதவுவர்.
துலாம்:
சித்திரை 3,4: இன்று மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். நட்பு வட்டம் விரியும்.
சுவாதி: பொதுநல ஈடுபாட்டால் தொல்லைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது
விசாகம் 1,2,3: பொறுமை இழந்து மற்றவர்களிடம் கடுமையாகப் பேச வேண்டாம்.
விருச்சிகம்:
விசாகம் 4: அரசு அதிகாரிகளுடன் புதிய தொடர்பு கிடைக்கும்.
அனுஷம்: தனிப்பட்ட விஷயங்களை யாரையும் நம்பி பகிர்ந்து கொள்ள வேண்டாம்
கேட்டை: பேச்சு, செயலில் கவனமாக இருப்போருக்கு பிரச்னையற்ற நாள்.
தனுசு:
மூலம்: துணிச்சலாக ஈடுபடும் விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
பூராடம்: உங்களின் எண்ணம் நிறைவேறும். தாயாரின் உடல்நலம் மேம்படும்.
உத்திராடம் 1: பதவி உயர்வு பற்றிய நல்ல செய்தி கிடைக்கும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: வீட்டை பழுதுபார்க்க இன்று முற்படுவீர்கள். மகிழ்ச்சி கூடும்.
திருவோணம்: உங்களின் கொள்கை நிறைவேறும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள்.
அவிட்டம் 1,2: யாரையும் சார்ந்து இருக்காமல் நீங்களே பாடுபடுங்கள்.
கும்பம்:
அவிட்டம் 3,4: குழந்தைப்பேறு வேண்டியவர்களுக்கு நற்செய்தி உண்டு.
சதயம்: குழந்தைகள் பற்றிய பயம் தீர்ந்து சந்தோஷம் வரும்.
பூரட்டாதி 1,2,3: பணிபுரியும் இடத்தில் இருந்த சச்சரவு இன்று நீங்கும்.
மீனம்:
பூரட்டாதி 4: கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். பயணத்திட்டம் தீட்டுவீர்கள்.
ரேவதி: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.