சிம்புவுடன் ஜோடி சேரும் இயக்குனரின் மகள்..

Prabha Praneetha
4 years ago
சிம்புவுடன் ஜோடி சேரும் இயக்குனரின் மகள்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடித்திருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றதுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் பத்து தல, வெந்து தணிந்தது காடு மற்றும் கொரோனா குமார் என மூன்று படங்கள் உள்ளன.

இதில் கொரோனா குமார் படத்தை கோகுல் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா, அன்பிற்கினியல் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க பிரமாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிதி சங்கர் தற்போது கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4