சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை!

Prabha Praneetha
2 years ago
சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை!

சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு புதிய சைபர் படையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

குறித்த படை மார்ச் மாதத்திற்குள் அமைக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதற்காக 20 அதிகாரிகளை பிரதமர் அலுவலகம் தெரிவு செய்துள்ளதாகவும், அண்டை நாடுகளில் இருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பொருளாதார சைபர் குற்றங்கள், ஆபாச இணையத்தளங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் சைபர் குற்றங்களுக்கு எதிராக பாதுகாப்பு வளையத்தை அமைக்க இந்தியாவுடன் ஒருமித்த கருத்து கொண்ட நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை நாடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.