அவித்த முட்டை மிளகு பிரட்டல் செய்வது எப்படி?
#Cooking
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருள்கள் :
- முட்டை - 2
- மிளகு - 1 தேக்கரண்டி
- உப்பு - 1/4 தேக்கரண்டி
- எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
- முட்டைகளை முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வேக வைத்துக் கொள்ளவும். முட்டை ஆறியவுடன் ஓட்டை நீக்கி விட்டு துருவியில் வைத்து துருவிக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகுத் தூள், உப்பு போட்டு ஒரு நிமிடம் கிளறவும். பிறகு முட்டை துருவலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- சுவையான முட்டை மிளகு பிரட்டல் ரெடி. இது குழந்தைகளுக்கு சாதத்துக்கு சைட் டிஷாக கொடுக்கலாம். அல்லது சான்ட்விச்சில் நடுவே வைத்துக் கொடுக்கலாம்.