இன்று முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் ஆனந்தம்

#India
இன்று முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் ஆனந்தம்

தற்போது 11 மாதங்களுக்குப் பின் குற்றால அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வெடி வெடித்து ஆனந்தத்தில் திழைத்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 11 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றி தனி மனித இடைவெளியை கடைபிடித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

மெயின் அருவி, ,ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும், மேக்கரை மற்றும் குண்டாறு பகுதியில் உள்ள தனியார் அருவிகளிலும் குளிக்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அருவிக்கும் மேற்பார்வையாளர்களாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்

சபரிமலை ஐயப்பன் சீசன் என்பதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது