21.12.2021 இன்றைய ராசி பலன்

Prasu
2 years ago
21.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: பணப்பற்றாக்குறையால் ஏற்பட்ட சிரமம் இன்று நீங்கும்.
பரணி: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
கார்த்திகை 1: சக பணியாளர்களிடம் இருந்து வந்த எதிர்ப்புகள் அடங்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: நல்ல நபர் ஒருவர் அறிமுகமாவார். கவலையற்ற நாள்.
ரோகிணி: கவலை ஒன்று தீர்ந்து நிம்மதி அளிக்கும். உற்சாகம் கூடும்.
மிருகசீரிடம் 1,2: குடும்ப ஒற்றுமை நிலைக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: சோம்பல் வேண்டாம். பணிகளில் கவனமாக இருக்கவும்.
திருவாதிரை: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நட்பு வட்டம் விரியும்.
புனர்பூசம் 1,2,3: பொறுப்பும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். சிரமம் நீங்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: ஆடை, ஆபரணம் சேரும். செலவு கூடும். கற்பனை பயம் வேண்டாம்.
பூசம்: கடன் பாக்கி வசூலாகும். மன நிறைவு உண்டு. உற்சாகமான நாள்.
ஆயில்யம்: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். எதிரி விலகுவார்.

சிம்மம்: 
மகம்: அடுத்தவர்களின் நலனுக்காகப் பாடுபட்டு பெருமிதம் கொள்வீர்கள்.
பூரம்: நீங்கள் விரும்பிய வகையில் இடமாற்றம் உண்டாகலாம்.
உத்திரம் 1: சொத்து வாங்கும்போது கவனமாக இருப்பது நல்லது.

கன்னி: 
உத்திரம் 2,3,4: மாணவர்கள் இன்று அதிகம் உழைத்துப் பலன் பெறுவர்.
அஸ்தம்: அலைச்சலுக்குப் பிறகு கடினமான விஷயம் ஒன்று நிறைவேறும்.
சித்திரை 1,2: அரசாங்க நன்மை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

துலாம்: 
சித்திரை 3,4: குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சுபநிகழ்வு ஒன்று உண்டு.
சுவாதி: நீண்ட நாளாக இருந்து வந்த உடல் உபாதை மறையும்.
விசாகம் 1,2,3: மனதை அரித்துக் கொண்டிருந்த கவலையில் இருந்து விடுபடுவீர்கள்

விருச்சிகம்: 
விசாகம் 4: வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.
அனுஷம்: முயற்சி காரணமாக முன்னேறுவீர்கள். பிரச்னைகள் தீரும்.
கேட்டை: புதிய முயற்சிகளை சிறிது காலத்திற்கு தள்ளி வையுங்கள்.

தனுசு:
மூலம்: எதையும் எதிர்ப்பதை விடுத்து அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பூராடம்: மாணவர்கள் சவால்கள், போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
உத்திராடம் 1: மனம் மகிழும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள்

மகரம்: 
உத்திராடம் 2,3,4: உங்களால் மற்றவர்கள் பயன் அடைவர். பேச்சில் கவனம் தேவை.
திருவோணம்: கடந்த சில நாளாக இருந்து வந்த மனஅழுத்தம் விலகும்.
அவிட்டம் 1,2: ஆதரவு பெருகும். வெற்றி வாய்ப்பு கூடும். பொறுமை தேவை.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பிரச்னைகள் தீரும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.
சதயம்: முயற்சியில் தடை, தாமதங்கள் இருக்கும். நண்பர்களைச் சந்திப்பீர்கள்.
பூரட்டாதி 1,2,3: பிரச்னை ஒன்றிற்குத் தீர்வு கண்டு நிம்மதி அடைவீர்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: எந்தவொரு விஷயத்திலும் பதற்றமின்றி முடிவு எடுப்பீர்கள்.
உத்திரட்டாதி: இன்று முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும்.
ரேவதி: உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். திறமைகள் கூடும்.