22.12.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: கடந்த நாட்களில் இருந்த சிறு தொல்லைகள் விலகும்.
பரணி: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களின் செல்வாக்கு கூடும்.
கார்த்திகை 1: திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு வந்து உங்களை மகிழ்விக்கும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: சுறுசுறுப்பான நாள். மன நிறைவு ஏற்படும்.
ரோகிணி: உங்களது தனிப்பட்ட வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: சுபநிகழ்ச்சி ஏற்பாடுகளால் இன்று வீடு களைக்கட்டும்.
திருவாதிரை: முயற்சியில் வெற்றி கிடைப்பதால் மகிழ்வீர்கள். வழிபாடு செய்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் உங்களது கருத்திற்கு ஆதரவு பெருகும்.
கடகம்:
புனர்பூசம் 4: கலகலப்பான நிகழ்ச்சிகள் இன்று நடைபெறும். அரசாங்க உதவி உண்டு.
பூசம்: மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.
ஆயில்யம்: அரசு உயர் பதவியில் உள்ளவர்கள் அறிமுகமாவார்கள்.
சிம்மம்:
மகம்: நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். சிலருக்கு அதிர்ஷ்டம் வரும்.
பூரம்: நண்பர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்திரம் 1: நேற்றுவரை இருந்த பிரச்னை ஒன்று தீரும். விரும்பிய மாற்றம் ஏற்படும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் சுமாரான லாபம் உண்டு. ஏமாற்றங்கள் தீரும்.
அஸ்தம்: இனிமையான பேச்சால் பிறருடைய மனதை கவருவீர்கள்.
சித்திரை 1,2: குழந்தைகள் உங்களுக்கு நம்பிக்கை தருவார்கள். புது வாய்ப்பு வரும்.
துலாம்:
சித்திரை 3,4: ஆன்மிக விஷயங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள்.
சுவாதி: சந்தோஷம் தரும் நிகழ்வுகள் நடைபெறும். நற்பலன்கள் கிடைக்கும்.
விசாகம் 1,2,3: பிறருக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிகம்:
விசாகம் 4: நீங்கள் தீட்டிய திட்டங்கள் ஓரளவு மட்டுமே வெற்றி பெறும்.
அனுஷம்: குடும்பத்தினர் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுப்பர்.
கேட்டை: தொழிலில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தனுசு:
மூலம்: குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். தொழில் கூட்டாளிகள் ஒத்துழைப்பர்.
பூராடம்: கவலைகள் மறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திராடம் 1: பல காலம் கிடப்பில் போட்டிருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: தொழிலில் போட்டிகளை சமாளிக்க பாடுபட வேண்டியிருக்கும்.
திருவோணம்: நல்ல நண்பர்களுக்காக அதிக நேரம் செலவழிப்பீர்கள்.
அவிட்டம் 1,2: உறவினர்களது வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
கும்பம்:
அவிட்டம் 3,4: உழைப்பு காரணமாக அலுப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சதயம்: குழந்தைகள் பற்றிய கவலைகள் தீரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: நீண்ட நாளாக வராதிருந்த நற்செய்தி ஒன்று வந்து சேரும்.
மீனம்:
பூரட்டாதி 4: சாப்பிடவும், துாங்கவும் விடாமல் வேலை உங்களை அழுத்தும்.
உத்திரட்டாதி: குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்கு பணி உயர்வு கிடைக்கும்.
ரேவதி: பொது நலம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.