மிளகு மீன் மசாலா சமைப்பது எப்படி?
#Cooking
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள் :
- துண்டு மீன் – அரை கிலோ
- வெங்காயம் – 2௦௦ கிராம்
- பச்சை மிளகாய் – நான்கு
- இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
- சீரகம் – ஒரு டீஸ்பூன்
- மிளகு தூள் – நான்கு டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – ஐந்து
- கொத்த மல்லி இலை – ஒரு கப்
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- உப்பு – தேவைகேற்ப
- எண்ணெய் – தேவைகேற்ப
- கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
- வெங்காயம், கொத்த மல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- அனைத்தும் ஒரளவு வதங்கியதும் மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும்.
- மீன் வெந்ததும், மிளகு துளை சேர்த்து கிளறவும். கடைசியாக கொத்த மல்லி இலையை சேர்த்து கிளறி இறக்கவும்.