தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 7

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 7

நேற்றைய தொடர்ச்சி...

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

கி.பி. 1 - 20

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.

கி.பி. 10

உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.

கி.பி. 21 - 42

குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.

கி.பி. 42 - 100

சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம்.

தொடரும்....

இணைந்திருங்கள் லங்கா4. கொம் உடன்.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 06.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 05.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 04.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 03.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 02.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 01.