மீன் முட்டை பிரை செய்து சாப்பிட்டு பாருங்கள்?
#Cooking
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள் :
- மீன் முட்டை – 200 கிராம்
- வெங்காயம் – 1
- ப.மிளகாய் – 2
- கடுகு – அரை டீஸ்பூன்
- சீரகம் – அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- மிளகு தூள் – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- இஞ்சி – சிறிய துண்டு
- தேங்காய் துருவல் – 5 டீஸ்பூன்
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
- வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீன் முட்டையை சுத்தம் செய்து வைக்கவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும். அடுத்து அதில் சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும்.
- மீன் முட்டை நன்றாக உதிரி உதிரியாக வரும் வரை கைவிடாமல் கிளறவும். அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும். சூப்பரான மீன் முட்டை பிரை ரெடி.