24.12.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
24.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: நண்பர்கள் மீது நம்பிக்கை வரும். இனிய சந்திப்பு ஒன்று உண்டு.
பரணி: சுபச்செய்தி வரும். நண்பர்களால் அன்புத் தொல்லைகள் ஏற்படும்.
கார்த்திகை 1: பழைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: இன்று வரும் செய்தி மகிழ்ச்சியை தரும். குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
ரோகிணி: நண்பர் ஒருவரிடம் உங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: வீண் அலைச்சல் குறையும். மன அமைதிக்கு வழி கிடைக்கும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: வீண் செலவினங்களால் தொல்லைகள் ஏற்படலாம்.
திருவாதிரை: சரியான நேரத்தில் துாங்க முடியாமல் இருந்த சூழ்நிலை மாறும்.
புனர்பூசம் 1,2,3: உஷ்ண சம்பந்தமான நோய் நீங்கி நிம்மதி வரும்.

கடகம்: 
புனர்பூசம் 4: அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொள்ள செலவு செய்வீர்கள்.
பூசம்: பணியில் கவனமாக இருப்பது நல்லது. நட்பு வட்டம் விரியும்.
ஆயில்யம்: பிறரது மனம் புண்படும் செயல்களைச் செய்ய வேண்டாம்.

சிம்மம்: 
மகம்: நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.
பூரம்: உற்சாகமாகவும் உல்லாசமாகவும் இன்று பொழுது போகும்.
உத்திரம் 1: அரசு அதிகாரிகளின் உதவியால் சில விஷயங்கள் முடியும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: இன்று சந்திக்கும் நபர்களால் சந்தோஷம் அதிகரிக்கும்.
அஸ்தம்: குடும்பத்தில் சிறு சிறு மருத்துவ செலவுகள் வந்துபோகும்.
சித்திரை 1,2: நண்பர் ஒருவரின் வழிகாட்டுதல் சிறப்பான பலன் தரும்.

துலாம்: 
சித்திரை 3,4: குழந்தைகள் விரும்பிய நல்ல விஷயங்கள் இன்று நடக்கும்.
சுவாதி: நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் தடையின்றி முடியும். மகிழ்ச்சி கூடும்.
விசாகம் 1,2,3: வியாபாரத்தில் லாபம் உண்டு. வருத்தம் நீங்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: சகஊழியர்கள் உங்களை ஆதரிப்பர். தொட்டது துலங்கும் நாள்.
அனுஷம்: மற்றவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள்.
கேட்டை: தைரியமுடன் செயல்பட்டு பிரச்னையில் இருந்து மீளுவீர்கள்.

தனுசு: 
மூலம்: உறவினர்களுடன் இருந்து வந்த பகை விலகும். உங்களின் சேமிப்பு உதவும்.
பூராடம்: துணிச்சலாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
உத்திராடம் 1: உறவுகள் பலப்படக்கூடும். இன்றைய பயணம் நன்மை தரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
திருவோணம்: பிறரிடம் ரகசியத்தை பகிர்ந்து கொள்ளும் போது கவனம் தேவை.
அவிட்டம் 1,2: பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: குடும்பத்தின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.
சதயம்: அக்கம்பக்கத்தினர், உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
பூரட்டாதி 1,2,3: பணியாளருக்கு பொறுப்பு கூடும். மகிழ்ச்சியான விஷயம் நடக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
உத்திரட்டாதி: எதிர்பாராத செலவு வந்தாலும் அது மகிழ்ச்சியையே தரும்.
ரேவதி: பணியாளர்களுக்கு புதிய யுக்திகள் தோன்றும். நட்பு வட்டம் விரியும்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!