ரகசியங்களை இந்த ராசியினரிடம் தெரியாமல் சொல்லிவிடாதீர்கள்!

#Astrology
ரகசியங்களை இந்த ராசியினரிடம் தெரியாமல் சொல்லிவிடாதீர்கள்!

​மேஷம்

மேஷ ராசியினர் மனக்கிளர்ச்சி கொண்டவர்கள். எதையும் மற்றவர்களிடம் வெளிப்படுத்த விரும்புவார்கள். ஒருவரின் உணர்ச்சிகள் மற்றும் அவர்களின் நிலைமை, பாதிப்பைப் புரிந்து கொள்வது கடினம். இவர்களின் ரகசியமே காப்பாற்றுவது கடினம். இவர்களிடம் மற்றவர்கள் தங்களின் ரகசியத்தைக் கூறினால் அது எளிதாக பொதுவெளியில் வைத்து விடுவார்கள்.

இவர்களிடம் ஏதேனும் ரகசியம் பகிர்ந்தால் இக்கட்டான நேரத்தில், உங்களின் ரகசியத்தை நகைச்சுவை என்ற பெயரில் வெளிப்படுத்தவும் செய்வார். அல்லது அதை வைத்து மிரட்டி தொந்தரவு செய்யவும் தயங்கமாட்டார்.

​மிதுனம்

மிதுன ராசியினரின் தனித்துவமே, மற்றவர்கள் தேடிச் சென்று இவர்களிடம் பேச விருப்பப்படுவார்கள். ஏனெனில் இவர்கள் உங்கள் பேச்சை காது கொடுத்து கேட்பவராக, மனம் திறந்து பேச விரும்புவார்கள். நிலைமையைப் புரிந்துகொள்ளக்கூடியவர்களாக இருப்பார்கள்.

மறுபக்கம், மற்றவர்களும் இவர்களிடம் பேச விரும்புவார்கள் என்பதோடு, இவர்களுக்கு கிசுகிசுக்களை விரும்பக்கூடியவர்களாக இருப்பதால், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்களின் ரகசியத்தை கிசுகிசுவாக சில இடங்களில் பொருத்தும் போக்கு கொண்டவர்கள் என்பதால், இவர்களிடம் ரகசியத்தை பகிர்வதில் கவனம் தேவை.

கன்னி ராசி

கன்னி ராசியினர் மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிட விரும்புவார்கள். தன் தேவைகளை சுயமாக நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் இவர்கள். தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்கும் எண்ணம் கொண்ட இவர்கள், மற்றவர்களிடம் உங்களுக்கு சரியானது எது என்பதைப் பற்றி புரிந்து கொண்டு, தேவைப்படும் போது அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவார்கள்.

மற்றவர்கள் குறித்து நன்றாக தெரியும் என நினைக்கும் அவர்கள், உங்கள் ரகசியத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்வது சரியானது என்று நினைத்தால், அதையும் அவர்கள் நிச்சயமாக செய்வார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் பெரும்பாலும் அவர்களின் செயல்பாடு ரகசியமானதாகவும், மர்மமானதாகவும் இருக்கும். இருப்பினும் இவர்களிடம் ஏதேனும் ஒருசில ரகசியங்களை நீங்கள் பகிர்ந்தால், அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றால், அவர்களின் கட்டுப்பாட்டை இழந்து, உங்கள் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். எனவே இவர்களிடம் உங்கள் ரகசியத்தை பகிர்ந்து கொள்வதற்கு முன் கவனமாக இருக்கவும்.

தனுசு

தனுசு ராசியினர் நேர்மையானவர்கள், முற்போக்கு சிந்தனைக் கொண்டவர்கள். அதனால் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசக்கூடியவர்கள்.
எப்போதும் உண்மையை பேச வேண்டும் என்றும், நேர்மையாக இருக்க வேண்டும் என முயல்வதால், இவர்களிடம் ஏதேனும் ஒரு ரகசியத்தை பகிர்ந்து கொண்டால், உண்மையைப் பேச வேண்டும் என்ற ஆர்வத்தில், மற்றவர்களைப் பற்றி யோசிக்காமல் உங்களின் ரகசியத்தை வெளிப்படுத்த தயங்கமாட்டார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!