முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது!

Prabha Praneetha
4 years ago
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது!

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளதோடு பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் தூஸ்பிரயோகத்திற்கு முயற்சித்தாக தெரிவிக்கப்பட்டு, சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து நேற்று முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4