26.12.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: பலகாலம் தள்ளிப்போன விஷயம் ஒன்று உங்களது முயற்சியால் முடியும்.
பரணி: உற்சாகமான நாள். வீடு வாங்கும் யோகம் வரும்.
கார்த்திகை 1: பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நிம்மதியான நாள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: நீண்ட கால முயற்சி காரணமாக இன்று பெரிய நன்மை நிகழும்.
ரோகிணி: தேவையற்ற கற்பனை காரணமாகத் தளர்ச்சி வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2: நீங்கள் நினைத்தது நிறைவேறும். உறவினர் உதவி செய்வர்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: தைரியமாக செயலாற்றி முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
திருவாதிரை: வெற்றி பற்றிய நம்பிக்கை அதிகரிக்கும். இனிய நாள்.
புனர்பூசம் 1,2,3: விருந்தினர்களை உபசரிப்பதில் சந்தோஷம் அடைவீர்கள்.
கடகம்:
புனர்பூசம் 4: அலைச்சல் இருக்கும். காதலர்களுக்கு மனநிறைவு ஏற்படும்.
பூசம்: சிறு ஏமாற்றம் வந்து நீங்கும். நேற்றைய மனஅழுத்தம் தீரும்.
ஆயில்யம்: பழைய சம்பவங்களால் ஏற்பட்ட வருத்தம் இன்று முடிவுக்கு வரும்.
சிம்மம்:
மகம்: வெற்றிகரமான நாள். அலுவலகப் பணியில் திருப்தி உண்டாகும்.
பூரம்: புதிய விஷயம் ஒன்றைத் தொடங்கி மனநிறைவு பெறுவீர்கள்.
உத்திரம் 1: மனதிற்கு இனிய நாள். மகனால் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: உடல்நலம் சீராகும். கடன் பிரச்னைகளை சமாளிப்பீர்கள்.
அஸ்தம்: நீண்ட நாளாக இருந்த பிரச்னை ஒன்று தீரும். மகிழ்ச்சி கூடும்.
சித்திரை 1,2: ரகசியத்தை பகிர்ந்து கொண்ட நபரின் மூலம் தொல்லை வரலாம்.
துலாம்:
சித்திரை 3,4: பணியாளர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வந்து மகிழ்விக்கும்.
சுவாதி: பொறுப்பு அதிகமாகும். எதிரியின் பலவீனத்தைக் கண்டறிவீர்கள்.
விசாகம் 1,2,3: வாழ்வில் முன்னேற்றம் அடைய முயற்சி செய்வீர்கள்.
விருச்சிகம்:
விசாகம் 4: இன்று மாலை நல்ல செய்தி வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
அனுஷம்: சொத்து பற்றிய பேச்சுவார்த்தை ஒன்று சாதகமாக முடியும்.
கேட்டை: உங்களுக்கு புகழும், விருதும் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு:
மூலம்: உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். வீண் அலைச்சல் முடிவுக்கு வரும்.
பூராடம்: தெய்வ நம்பிக்கை துணை கொண்டு நிம்மதி அடைவீர்கள்.
உத்திராடம் 1: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: எதிர்பார்த்த நன்மை தாமதமாகும். பழைய நட்பு புதுப்பிக்கப்படும்.
திருவோணம்: கடந்த நாளில் நீங்கள் செய்த செயல்கள் இன்று விளைவை ஏற்படுத்தும்.
அவிட்டம் 1,2: மகான்களின் தரிசனம் கிடைக்கும். எடுத்த முயற்சி திருப்தி தரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: இன்று யாரிடமும் நிதானத்தை இழந்து பேச வேண்டாம்.
சதயம்: உங்கள் மீது பழி வரக்கூடிய செயலுக்குத் துாண்டுபவரைப் புறக்கணியுங்கள்.
பூரட்டாதி 1,2,3: மூத்தவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மீனம்:
பூரட்டாதி 4: எதிர்பாராத வகையில் நண்பர்களின் சந்திப்பு இன்று நிகழும்.
உத்திரட்டாதி: மற்றவர்களுக்கு நன்மை தரக்கூடிய செயலைச் செய்வீர்கள்.
ரேவதி: எடுத்த வேலையை முடித்து நிம்மதி அடைவீர்கள். மகிழ்ச்சி கூடும்.